எரிவாயு நெருக்கடிக்கு பஸிலும் கோத்தாபயவுமே பொறுப்பு!

போதிய டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட போதிலும், பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக இருந்து எடுத்த முடிவினால் நாட்டில் எரிவாயு நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பல நெருக்கடிகளால் நாட்டு மக்கள் அவதியுறுவதாகவும், அதிகாரிகளின் சீரற்ற தீர்மானங்களாலேயே எரிவாயு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எரிவாயு நெருக்கடிக்கு பசிலும், ஜனாதிபதியுமே பொறுப்பு - புபுது ஜாகொட குற்றச்சாட்டு | Both Basil And The President Are Responsible

இடைநிறுத்தப்பட்ட ஒப்பந்தம்

லிட்ரோ நிறுவனம் நாட்டிற்கு எரிவாயு வழங்குவதற்காக ஓமன் நிறுவனத்துடன் பிப்ரவரி 28, 2020 முதல் பிப்ரவரி 28, 2023 வரை ஒப்பந்தம் செய்து கொண்டது. எனினும், ஒக்டோபர் 6, 2021 அன்று, பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவியேற்றார், பிப்ரவரி 28 அன்று, ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டது.

ஒப்பந்தம் செய்யப்பட்ட அந்த வர்த்தக நிறுவனம் அப்போதைய நிதியமைச்சின் செயலாளரிடம் இது குறித்து விசாரணை நடத்தியது. அந்த கடிதம் என்னிடம் உள்ளது. அவன்கார்ட் நிறுவனத்துடன் இணைந்த நிறுவனம் ஒன்றின் மூலம் எரிவாயு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் பின்னர், இந்த இரு நிறுவனங்களிடமிருந்தும் எரிவாயு வாங்க ஏற்பாடு செய்யவில்லை. அப்போதுதான் லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தெஷார ஜயசிங்க அதிக விலைக்கு எரிவாயுவை வாங்க முயற்சிக்கின்றனர்.

எரிவாயு நெருக்கடிக்கு பசிலும், ஜனாதிபதியுமே பொறுப்பு - புபுது ஜாகொட குற்றச்சாட்டு | Both Basil And The President Are Responsible

ஜனாதிபதி ஆயு்வு செய்யவில்லை

இவ்வாறு எரிவாயு கொள்வனவு செய்தால் 10 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் எனவு குறிப்பிட்டுள்ளார். அவர் உண்மைகளை வெளிப்படுத்திய போதிலும், அவ்வாறு செய்வது யார் என்பதை ஜனாதிபதி ஆராயவில்லை.

அவ்வாறு செய்திருந்தால் நாடு எரிவாயுவைப் பெற இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதில்லை. எனவே, நாட்டின் எரிவாயு நெருக்கடியை மேலும் மோசமாக்குவதற்கு ஜனாதிபதியும் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *