அதிகரிக்கும் பணவீக்கம் 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள் மதிப்பிழக்கும் அபாயம்!

நாடு அதிக பணவீக்கத்தை நோக்கி நகர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் நாடு பலவீனமான நிலையை எட்டியுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத பணவீக்கம் மட்டும் 54 சதவீதமாக உள்ளது என்றும், பணவீக்கத்தில் சிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஜனவரி மாதம் முதல் பணவீக்கம் மாதாந்தம் 10 தொடக்கம் 15 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், அது எங்கு முடிவடையும் என்பதற்கான எந்த அறிகுறியும் மக்களுக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 5,000 ரூபா நாணயத் தாள் மதிப்பிழக்கும் அபாயம்! | Sri Lanka Moving Towards Hyperinflation

5,000 ரூபா நாணயத் தாள் மதிப்பும் இல்லாமல் போகலாம் 

தற்போது தனிநபர்கள் 20, 50 மற்றும் 100 ரூபாய் நாணயத் தாள்கள் மூலம் பொருட்களை வாங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் 5,000 ரூபா நாணயத் தாள் கூட மதிப்பும் இல்லாமல் போகலாம் என்றும், இதுபோன்ற நாணயத் தாள்களில் எந்தப் பயனும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

நாடு ஆபத்தான காலங்களில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும், மக்களைப் பற்றி அச்சம் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணவீக்கம் 54 சதவீதமாக இருக்கும் போது வங்கி வட்டி விகிதம் 20 முதல் 24 சதவீதம் வரை இருக்கும் போது ஒரு நாடு எப்படி செயல்பட முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *