நடிகையுடன் தங்கியிருந்த பிரபல நடிகர் செருப்பால் அடித்த மூன்றாவது மனைவி!

பிரபல தெலுங்கு நடிகரை அவரது மூன்றாவது மனைவி செருப்பால் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு(60), இவரது சகோதரரான நரேஷ் பாபுவும் சினிமாவில் நடித்து வரும் இவர் மூன்று முறை திருமணம் செய்துள்ளார்.

முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்வதற்கு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது பிரபல கன்னட நடிகை பவித்ராவை 4வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. நடிகை பவித்ரா லோகேஷும் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார்.

நடிகர் நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்ததோடு, தான் அவரை விட்டு பிரிய முடிவெடுத்ததற்கு காரணமே பவித்ரா லோகேஷ் என்றும் தனக்கும் ரமேஷ்கும் விவாகரத்து ஆகவில்லை என்று கூறியள்ளார்.

இந்நிலையில், நரேஷும், பவித்ராவும், மைசூரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருப்பதாக அறிந்த ரம்யா, அந்த இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது போலீசார் அங்கு வந்து ரம்யாவை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அதேபோல் ஒரே வீட்டில் தங்கி இருந்த நரேஷும், பவித்ராவும் வெளியே வந்தபோது செருப்பால் அடிக்க முயன்றார் ரம்யா.

இதையடுத்து போலீசார் நரேஷை பத்திரமாக அழைத்து சென்றனர். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நடிகர் நரேஷ் விசில் அடித்தபடி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *