பெண் ஊழியர்கள் கருக்கலைப்பு செய்யலாம் செலவை ஏற்பதாக நிறுவனங்கள் அறிவிப்பு!

அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது.

இந்நிலையில், 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத்தொடரப்பட்டது.

கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்நிலையில், வேறு மாநிலங்களுக்கோ சென்று கருக்கலைப்பு செய்ய விருப்பமுள்ள பெண் ஊழியர்களின் பயணச் செலவை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களே ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வால்ட் டிஸ்னி கோ மற்றும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா உள்ளிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ஆனால், கருக்கலைப்பு தொடர்பான பயணங்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் தொகையால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கருக்கலைப்பு எதிர்ப்பு குழுக்களிடம் இருந்து வழக்குகளால் பாயலாம்.

அந்த நிறுவனங்கள் பாதிக்கப்படலாம். அந்நிறுவனங்களின் இந்த கொள்கைகள், அரசின் சட்டங்களை மீறும் வகையில் அமைந்து நிறுவன உரிமையாளர்கள் வழக்குகளை எதிர்கொள்ள நேரிடும் என்று வழக்கறிஞர்களும் பிற நிபுணர்களும் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த மாதமே, ஆன்லைன் ஆய்வு தளமான யெல்ப், மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன் மற்றும் டெஸ்லா, ஆப்பிள் உட்பட பல நிறுவனங்கள் இந்த சலுகையை அறிவித்திருந்தன. மேலும், ஜான்சன் & ஜான்சன், ஆன்லைன் டேட்டிங் தளங்களான ஓகே குப்பிட் மற்றும் பம்பிள், நெட்பிளிக்ஸ் மற்றும் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஜேபி மோர்கன் சேஸ் அண்ட் கோ ஆகியவையும் இந்த சலுகை பலன்களை வழங்கும் பிற நிறுவனங்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *