அதானியின் 60 ஆவது பிறந்த நாளில் 60 ஆயிரம் கோடி ரூபா நன்கொடை!

கௌதம் அதானியின் தந்தை சாந்திலால் அதானியின் 100வது பிறந்தநாள், அதானியின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு அதானி குடும்பம் சமூக நலன்களுக்காக ரூ.60,000 கோடி நன்கொடை அளித்துள்ளது.

தொழிலதிபர் அதானியின் 60வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் ரூ.60,000 கோடி செலவில் கல்வி, மருத்துவம் மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான உதவிகளை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்தியாவின் மக்கள்தொகை நன்மையின் திறனைப் பயன்படுத்த, சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் அதிகரித்து வருகிறது. இந்த ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குறைபாடுகள் ”ஆத்மநிர்பர் பாரத்”க்கு தடையாக உள்ளன. அதானி அறக்கட்டளை அனைத்து பகுதிகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி முயற்சிகளில் கவனம் செலுத்தும் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்வதன் மூலம் நமது எதிர்கால பணியாளர்களின் திறன் மற்றும் போட்டித்தன்மையை கணிசமாக மேம்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=2311946703&pi=t.aa~a.2413678391~i.1~rp.4&w=412&lmt=1656047116&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Fnational%2F44428&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1656047115982&bpp=27&bdt=6207&idt=-M&shv=r20220622&mjsv=m202206220101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&gpic=UID%3D0000047ccc0b79f9%3AT%3D1649115900%3ART%3D1656047115%3AS%3DALNI_MbBBvE1-cpMFyjVTjGSeO3zcrjYCw&prev_fmts=0x0&nras=2&correlator=8105650059765&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1656047115&ga_hid=2019895834&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=0&ady=1557&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C31065544%2C31068188%2C44768098&oid=2&pvsid=2452638492218968&tmod=1909060696&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=eD4LDEuDGV&p=https%3A//www.kumudam.com&dtd=121

மேலும், இது குறித்து தொழிலதிபர் கௌதம் அதானி கூறுகையில் “எனது தந்தையின் 100 வது பிறந்தநாள் இந்த ஆண்டும், என்னுடைய பிறந்தநாள் இன்றும் கொண்டாடப்படுகிறது. இதனால் என்னுடைய குடும்பம் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான சமூக நடவடிக்கைகளுக்கு 60,000 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதானி குழுமத்தின் தலைவர் அதானி கூறியுள்ளார். இவ்வாறு நாங்கள் செய்யவிருக்கு நலத்திட்டங்களை எவ்வாறு செய்யலாம், எந்ததெந்த துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்பது குறித்து வல்லுநர்களின் உதவிகளையும், ஆலோசனைகளையும் நாடியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 

தன்னுடைய 60வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் அதானி உலகளவில் அதிகமான மனிதாபிமான உதவிகளை செய்து வரும் கோடீஸ்வரர்களான வாரன் பஃப்பெட், மார்க் ஜூகர்பெர்க் பட்டியலில் தற்போது தொழிலதிபர் கௌதம் அதானியும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *