அதிகளவு சுயஇன்பத்தில் ஈடுபடும் சுவிஸ் பெண்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

முன்னெப்போதம் இல்லாத அளவிற்கு 2022ம் ஆண்டி பெண்கள் அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபடுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

உலகளவில், ஒரு வருடத்திற்கு முந்தையதை விட 2022 இல் பெண்கள் அதிக அளவில் சுயஇன்பத்தில் ஈபடுவதாக The vibrator brand Womanizer நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், ஆண்டின் இறுதிக்குள் ஆண்களுக்கு நிகரான பெண்கள் சுயஇன்பத்தில் ஈடுபட கூடும் எனவும், சுயஇன்பம் என்று அழைக்கப்படும் இடைவெளி இன்னும் அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக, ஆண்களை விட பெண்கள் சுமார் 47 சதவீதம் குறைவாகவே சுயஇன்பத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு ஆண்களை விட 62 சதவீதம் குறைவாக சுயஇன்பத்தில் ஈடுபட்டனர்.

கணக்கெடுப்பின் முடிவுகளுக்காக, குறித்த நிறுவனம் இந்த ஆண்டு மே மாதத்தில் சுவிட்ஸர்லாந்து உள்ளிட்ட 15 வெவ்வேறு நாடுகளில் 22,315 பேரை நேர்காணல் செய்தது.

இதன் முடிவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில், பெண்கள் சராசரியாக 76 முறை சுயஇன்பத்தில் ஈடுபடுவதாகவும். இது கடந்த ஆண்டு வெறும் 53 முறை என்ற ரீதியில் இருந்ததாகவும், ஆண்கள் 145 முறை ஈடுபடுவதாகவும் 2021 இல் இந்த எண்ணிக்கை 140 முறை என்ற குறைந்த மட்டத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்து உலக சராசரியை விட சற்று குறைவாக இருப்பதாகவும், எனினும், 2021 ஐ விட 32 மடங்கு அதிகமாக சுயஇன்பத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் ஆண்கள் இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அவர்கள் சராசரியாக 162 முறை ஈடுபட்டுள்ளதாகவும், இது 2021 இல் 174 ஆக காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் 22 சதவீத சுவிஸ் பெண்கள் தாங்கள் சுயஇன்பம் செய்வதில்லை என்று கூறியுள்ளனர். மறுபுறம், ஆண்களுக்கு, எட்டு சதவீதம் பேர் சுயஇன்பம் செய்வதில்லை என தெரிவித்துள்ளனர்.

உலகளவில், பங்கேற்பாளர்களில் கிட்டத்தட்ட 24 சதவீதம் பேர் சுயஇன்பம் செய்வதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *