இலங்கையில் அறிமுகமாகும் புதிய அடையாள அட்டை!

இலங்கையில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்து புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்க்பட்டுள்ளது.

ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக இதனை தெரிவித்துள்ளார்.

Sri Lanka Unique Digital ID என இந்தப் புதிய அடையாள அட்டை அழைக்கப்படுகின்றது.

கைரேகைகள் மற்றும் இரத்த வகை உள்ளிட்ட நபரின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களுக்கு மேலதிகமாக உயிரியல் தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய அடையாள அட்டை இந்திய கடன் உதவியுடன் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த அட்டைகள் ஒன்றரை வருடங்களுக்குள் 17 மில்லியன் மக்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *