உலகின் விலையுயர்ந்த தலையணை!


நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்க, ஒரு தலையணை வாங்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் அரை கோடியை செலவிட வேண்டும். உலகத்துலயே அதிக விலை கொண்ட தலையணை

இந்த பிரத்யேகமாக தலையணையை நெதர்லாந்தைச் சேர்ந்த பிசியோதெரப்பிஸ்ட்தான் கண்டுப்பிடித்து உருவாக்கியிருக்கிறார். இந்த தலையணையை உருவாக்குவதற்காக 15 வருட கடின உழைப்பை செலுத்தி, ஏராளமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். டச்சு மருத்துவர் Thijs van der Hilst. தலையணையின் விலை 57,000 டொலர்.

இந்த தலையணையில் நீலக்கற்கள், தங்கம், வைரம் பதிக்கப்பட்டிருக்கிறது. ரோபோட்டிக் மில்லிங் மிஷினால் பஞ்சுகள் நிரப்பட்டுள்ள இந்த தலையணையின் ஜிப்பில் நான்கு வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதுபோக Sapphire எனும் ஜெம்ஸ்டோனும் இந்த தலையணையில் இருக்கிறதாம்.

3டி ஸ்கேனர்கள், பிரிண்டர்கள், கணித அல்காரிதம், மல்பெரி பட்டு, எகிப்திய பருத்தி மற்றும் 24 கரட் தங்க துணி ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த தலையணை உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், வெறுமனே இந்த தலையணையை கொடுக்காமல் அதனை ஒரு பிராண்டட் பெட்டிக்குள் வைத்தே கொடுக்கிறார்கள். இந்த விலையுயர்ந்த தலையணையை பயன்படுத்துவதால் தூக்கமின்மையின் இருந்து விடுபட்டு நிம்மதியாக தூங்கலாம் என இதனை கண்டுபிடித்தவர் கூறியுள்ளார்.

ஆனால், இந்த தலையணையோட விலையை பார்த்து உண்மையில் தூக்கமே வந்தாலும் அதனை எவரேனும் திருடிடுவார்களோ என்ற அச்ச உணர்வினால் வந்த தூக்கம் கூட போய்விடுமே என இது குறித்து அறிந்தவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *