இலங்கையில் 20 ரூபாய் நாணயகுற்றி வெளியீடு!

இலங்கை மத்திய வங்கி அதனை நினைவுகூரும்வகையில் 20 ரூபாய் நாணயகுற்றி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதை முன்னிட்டு இந்த நாணயகுற்றி வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாணயகுற்றி நேற்றுமுன்தினம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்மவிற்கு மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ச.சரீப்டீன் வழங்கினார்.

நினைவு நாணயக்குற்றி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், உட்பட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன. 

அத்துடன் பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட புள்ளிவிபரவியலாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *