இலங்கை அணி அபார வெற்றி!

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்தேச ஒருநாள் போட்டியில் 26 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.4 ஒவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து டக்வெல்த் – லூயிஸ் முறைப்படி 43 ஓவர்களில் 216 என்ற வெற்றி இலக்கு அவுஸ்திரேலியா அணிக்கு வழங்கப்பட்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 36 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

தனஞ்ச டி சில்வா மற்றும் தசுன் சானக ஆகியோர் தலா 34 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 37.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஒட்டங்களை மாத்திரமே பெற்றது.

அவுஸ்திரேலியா அணி சார்பாக டேவின் வோர்னர் 37 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

கிளேன் மெக்ஸ்வெல் 30 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் சாமிக்க கருணாரத்ன மூன்று விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர, தனஞ்ச டி சில்வா மற்றும் துமித் வெல்லாலகே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகன் விருதை சாமிக்க கருணாரத்ன பெற்றார்.

இதற்கமைய, ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *