அவுஸ்திரேலியாவிலும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்!

அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரமான சிட்னி நகரமும் உள்ளடங்கும்  நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள வீடுகளில் அத்தியவசியமற்ற மின் விளக்குகளை அணைத்து விடுமாறு அந்நாட்டு எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் ( Chris Bowen) கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்படி செய்யவில்லை என்றால், தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். முடிந்தவரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு எரிசக்தி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் கேட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் சுமார் மூன்று மாத காலமாக நிலவி வந்த எரிசக்தி நெருக்கடி தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியா உலகில் பிரதான நிலக்கரி ஏற்றுமதியாளர். எனினும் அந்நாடு நிலக்கரி மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தாதது, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *