6 மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்ட அதிசய கோழி!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே 6 மணி நேரத்தில் 24 முட்டையிட்ட கோழி ஒன்று அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

கேரள மாநிலம் அம்பலப்புழா பகுதியை சேர்ந்த பிஜுகுமார் என்பவர் 20க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார்.

அதில் BV380 என்னும் வீரிய கலப்பு ரக சின்னு என்ற கோழி கடந்த ஞாயிறு காலை 8.30 மணிக்கு முட்டையிட தொடங்கியது.

அதன் பிறகு வரிசையாக 2.30 மணி வரை கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை அந்த கோழி இட்டது.

இந்த அதிசய கோழியை பார்வையிட ஊர் மக்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் திரண்டனர்.

அவர்களின் கண் எதிரே அந்த கோழி முட்டைகளை போட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த மண்ணூத்தி கால்நடை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் டாக்டர் பினூஜ், இது ஒரு அரிதான நிகழ்வு என கூறினார்.

ஒரு கோழி 6 மணிநேரத்தில் 24 முட்டைகளை போடுவது என்பது மிகவும் அதிசயமான சம்பவமாகும்.

இது தொடர்பாக ஆராய்ச்சி செய்த பிறகே என்ன காரணம்? என்பது குறித்து கூறமுடியும்’’ என்றார்.

ஒரு கோழி ஆறு மணி நேரத்தில் 24 முட்டையிட்ட சம்பவம் அந்த ஊரில் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *