சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கை மறுப்பு!

உடன்படிக்கையை விரும்பாத இலங்கை
உணவு பாதுகாப்பு தொடர்பான இரண்டு உடன்படிக்கைகளுக்கு உடன்பட இலங்கை மறுத்துள்ளது.

உலக வர்த்த சம்மேளனம் முன்மொழிந்த இந்த உடன்படிக்கைகளுக்கே இலங்கை தமது இணக்கத்தை வெளியிடவில்லை என்று ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் இந்த வாரம் கூடியுள்ள 164 நாடுகளின் வர்த்த அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாட்டில், உணவு நெருக்கடியை தவிர்ப்பதற்காக, குறைந்த அபிவிருத்திக்கொண்ட மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவும் வகையில் உடன்பாட்டை எட்ட முயற்சிக்கப்படுகிறது.

சர்வதேச உடன்படிக்கைகளுக்கு உடன்பட மறுத்துள்ள இலங்கை!

திறந்த சந்தை மற்றும் ஏற்றுமதி தடையின்மை
திறந்த சந்தை மற்றும் காலநிலை போன்றவற்றினால் ஏற்படும் நெருக்கடிகள் காரணமாக பசிக்காக போராடும் நாடுகளுக்கு, உலக வர்த்தக சம்மேளனத்தின் ஏற்றுமதிகளை தடுக்காமலிருப்பது என்ற இரண்டு உடன்படிக்கைகளே முன்மொழியப்பட்டுள்ளன.

எனினும் இந்த முன்மொழிகளுக்கு இந்தியா, இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை தவிர்ந்த ஏனைய நாடுகள் ஆதரவளித்துள்ளன.

அதிலும் உணவு பொருள் இறக்குமதி நாடுகளான எகிப்து மற்றும் இலங்கை ஆகிய இரண்டும், உலக வர்த்த சம்மேளனத்தின் உணவு ஏற்றுமதி செய்யும் திறன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும் என்ற அங்கீகாரத்தை விரும்புவதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *