இலங்கையை கைவிட்ட உலக நாடுகள் – IMFஇன் உதவி தொடர்பில் வெளியான தகவல்!

சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெறுவதற்கு இந்த வருட இறுதி வரை இலங்கை காத்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் மட்டக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், கடனுக்கான நிதிச் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பின்னரே கடன் பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் ஜப்பானிய தூதுவருடன் கலந்துரையாடிய போது இலங்கை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக அவர் கூறினார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைந்தால் குறுகிய கால கடன் வழங்குவது பற்றி பரிசீலிக்கலாம் அல்லது எதிர்க்கட்சியும் அரசாங்கமும் கடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என்றார் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி  மொஹமட் நஷீட்டை நான் சந்தித்தேன், சில டொலர்களை கொண்டு வர இலங்கை அவருக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளதுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில்  மொஹமட் நஷீட் மூலம் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் மொஹமட் பின் சல்மானை  தொடர்பு கொண்ட போது, ​​இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான உறுதியான திட்டத்தை வகுக்கும் வரை இந்த விவகாரத்தை கொண்டுவர  வேண்டாம் என சவுதி இளவரசர் கூறியதாக  ஹர்ஷ  டி சில்வா மேலும்  தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆட்சியாளர் ஷேக் மொஹமட் பின் ரஷித் அல் மக்தூம் இலங்கைக்கு விற்கப்பட வேண்டிய பொருட்களின் பட்டியலை அனுப்ப முடியுமானால் கடன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியதாகவும் ஹர்ஷ  டி சில்வா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *