அனைத்து வலையமைப்புகளுக்கும் இலவச அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தும் Airtel

இலங்கையில் முதன்முறையாக அனைத்து வலையமைப்புகளுக்குமான இலவச வரையறையற்ற
அழைப்பு வசதியை Airtel அறிமுகப்படுத்தியுள்ளது
சில முக்கியமான உரையாடல்களின் போது பாவனையாளர்கள் தமது கையடக்க தொலைபேசி மிகுதியை சரிபார்ப்பதோ அல்லது பிற வலையமைப்பிற்கு அழைப்பை மேற்கொள்வதற்கு அதிக செலவு ஏற்படும் என்பது பற்றி கவலைப்பட வேண்டிய நாட்கள் போய்விட்டன. நாட்டின் தொலைத்தொடர்பு துறையில் மற்றுமொரு வரலாற்று மைல் கல்லைக் குறிக்கும் வகையில், Airtel Lanka முதன்முறையாக அனைத்து வலையமைப்புகளுக்கும் வரையறையற்ற அழைப்புகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு வரையறையற்ற அணுகலையும் அதன் Freedom Plans மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. எயார்டெல் Freedom Packs அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, தடங்களற்ற அழைப்பு அனுபவத்தை வழங்குவதற்காக அனைவருக்கும் இலவச அழைப்புகளை வழங்கும் புதிய சீர்திருத்தங்களுக்கு தொலைத்தொடர்பு நிறுவனம் தொடர்ந்து மேம்படுத்தல்களை செய்து வருகிறது.
முற்கொடுப்பனவு பாவனையாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உள்ளூர் அழைப்புகளை ஏற்படுத்துவதற்கான நிஜமான சுதந்திரத்தை இது வழங்குகிறது, எனவே அவர்கள் உள்ளூர் அழைப்புக் கட்டணங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நீங்கள் வேறு எந்த வலையமைப்புகளுக்கும் அழைப்பை மேற்கொண்டாலும் அது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதுடன் வரையறையின்றி அழைப்புக்களை மேற்கொள்ளலாம்.
இது குறித்து கருத்து தெரிவித்த எயார்டெல் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி / முகாமைத்துவ பணிப்பாளர் அஷீஷ் சந்திரா கூறியதாவது: “குறிப்பாக அனைத்து இலங்கையர்களும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வரும் தற்போதைய சூழ்நிலையில், எமது Unlimited Packs அறிமுகமானது, இலங்கையின் முற்கொடுப்பனவு பாவனையாளரகளுக்கு அதிக பெறுமதியைச் சேர்ப்பதற்கு தொழில்துறையை வழிநடத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இது அவர்களுக்கு சந்தையில் சிறந்த மதிப்பையும் சேர்க்கும்.”
எயார்டெல், இலங்கையிலுள்ள பல துறைகளில் நிபுணத்துவம் கொண்டவர்களுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளது, மேலும், இலங்கையில் வரையறையற்ற அழைப்புக்களை அதே வலையமைப்புக்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் சேவை வழங்குநர் இதுவாகும். எயார்டெல் Freedom Packsஐ அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், எயார்டெல் அதன் பாவனையாளர்களுக்கு ஒரு Rechargeக்கு அதிக சலுகைகளை வழங்கியது, போட்டித் தன்மையுடன் ஒப்பிடும்போது இது அவர்களின் அனைத்து உபயோகத்திற்கும் அதிக சேமிப்பைக் கொண்டதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் வரையறையற்ற இலவச அழைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், எயார்டெல் தொலைத்தொடர்பு துறையில் Trend setterஆக மாறுகிறது.
“எங்கள் வணிகத் திட்டங்களைப் புதுப்பிப்பதன் மூலம், அதிக போட்டித்தன்மையையும் வாடிக்கையாளர் அடிப்படையிலான மதிப்பையும் வழங்குவதற்காக இலங்கையின் மொபைல் தொலைத்தொடர்பு துறையில் மாற்றங்களைச் செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். வரையறையற்ற அழைப்புகள் மற்றும் வரையறையற்ற சமூக வலையமைப்பு பாவனையை வாடிக்கையாளர்களுக்கு அனுமதித்த முதல் வழங்குநர் நாங்களே.” என அஷீஷ் மேலும் கூறினார்.
முற்கொடுப்பனவு பாவனையாளர்கள் 749 ரூபா மற்றும் 1,249 ரூபா ஆகிய பெக்கேஜ்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த இரண்டு Packageகளும் எயார்டெல் பாவனையாளர்களுக்கு அனைத்து (Airtel மற்றும் Airtel அல்லாத) வலையமைப்பிற்கும் வரையறையற்ற உள்ளூர் அழைப்புகள் மற்றும் வரையறையற்ற சமூக ஊடகங்களை (YouTube, Facebook, FB Messenger மற்றும் WhatsApp) பாவனை செய்ய அனுமதிக்கின்றன. அத்துடன், ரூ.749 Pack 30GB 4G டேட்டாவை வழங்குகிறது, அதே சமயம் ரூ.1,249 Pack 60GB 4G Anytime டேட்டாவை வழங்குகிறது. இந்த இரண்டு Packageகளும் 30 நாட்களுக்கு செல்லுபடியாவதுடன் இலவச SMSகளையும் வழங்குகின்றது.
எயார்டெல் 2009ஆம் ஆண்டில் இலங்கைக்குள் பிரவேசித்ததில் இருந்து தொலைத்தொடர்பு நிறுவனமாக இலங்கையில் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாக ‘Freedom Packs/Plans’ கருதப்படுகிறது. எயார்டெல்லின் purpose-built 4G வலையமைப்பு, 99% Buffering இல்லாத ஸ்ட்ரீமிங், குறிப்பிடத்தக்க வேகமான Loading Timeகள் மற்றும் 4G சிக்னல்களுடன் மேம்படுத்தப்பட்ட உட்புற கவரேஜ் உள்ளிட்ட சிறந்த பாவனை அனுபவத்தை உறுதியளிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த நவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் மூலம் பாவனையாளர்களை 5G தொழில்நுட்பத்தீற்கு பாவனையாளர்களை தொடர்ச்சியாக நெருங்கிச் செல்ல வைப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *