தமிழில் பேசிய அமெரிக்கருக்கு இலவச உணவு!

அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இந்திய உணவகம் ஒன்றில் தமிழில் உணவு கோரிக்கையினை விடுத்ததை தொடர்ந்து நெகிழ்ந்துபோன உரிமையாளர், அவருக்கு இலவசமாக உணவு வழங்கியுள்ளார்.

இது குறித்த தகவர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஸியோமா என்பவர் உணவுகள் தொடர்பாக YouTube வலைதளத்தில் காணொளிகளை பதிவேற்றி வருகிறார். இந்நிலையில்,  நியூயார்க்கில் உள்ள ஒரு இந்திய உணவகம் ஒன்றுக்கு அண்மையில் அவர் சென்றுள்ளார்.

இதன்போது தமிழில் உணவுகளின் பெயரைக் குறிப்பிட்டு எடுத்து வரச் சொல்லியுள்ளார். அமெரிக்கர் ஒருவர் தமிழில் பேசி உணவு கேட்டதால் உணவக உரிமையாளர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து ஸியோமாவுக்கு இலவசமாக உணவு வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு YouTube வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட பின், 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். 

இது குறித்து ஸியோமா கருத்து வெளியிடுகையில், 

உலகின் மிகப் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று என அறிந்தபோது, அம்மொழியை கற்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இந்நிலையில், நியூயார்க்கில் தமிழர்களால் நடத்தப்படும் உணவகங்களை தேடத் துவங்கினேன். 

அப்படி இந்த உணவகத்தில் நுழைந்து நான் அழகு தமிழில் பேசியதை கேட்டு உரிமையாளர் மகிழ்ச்சி அடைந்து இலவசமாக உணவு வழங்கினார் என ஸியோமா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *