பிண நீரை விற்று பணம் சம்பாதிக்கும் பெண் ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்!

சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட மீட் ஏரியிலிருந்து எடுக்கப்பட்ட பிணநீர் என பாட்டில்களில் அடைத்து, வினோத பெண் ஒருவர் விற்று பணம் சம்பாதித்து வருகிறார்.

அமெரிக்காவின் மிகப் பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான லாஸ் வேகாஸின் மீட் (Mead) ஏரியிலிருந்து, தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.

இந்த ஏரியை வைத்து புதிய தொழில் ஒன்றைத் தொடங்கி பிரபலமாகி இருக்கிறார் சார்லி என்ற 42 வயதுப் பெண். லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப் மாலில் பிளாஸ்பீம் பொட்டிக் என்ற சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார்

தனது கடையில் மந்திரம், மாந்திரீகம் தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வரும் இவர், புதிதாக “லேக் மீட் கார்ப்ஸ் வாட்டர்” (Lake Mead Corpse Water) என்பதை அறிமுகம் செய்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சார்லி, இது நகைச்சுவையாக தொடங்கியது என்று விளக்கினார். பாரம்பரியமாகப் பிண நீர் மாந்திரீக நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்று கூறி விற்பனை செய்வதாக அவர் கூறினார்.

இது உண்மையில் ஏரியிலிருந்து எடுக்கப்படும் பிண நீர் இல்லை என்றும் இது Witch-hazel எனும் தாவரம், கண்ணாடி பாறைகள், அழுக்கு மற்றும் பச்சை மைக்கா ஆகியவற்றின் கலவை என்றும் அவர் கூறியுள்ளார்.

சார்லியும் அவரது கணவரும் “பிண நீரை” ஒரு பாட்டில் 7.77 அமெரிக்க டாலருக்கு விற்கிறார்கள். இதுவரை, இந்த ஜோடி ஆன்லைனில் 75 பாட்டில்களையும், கடையில் 50 பாட்டில்களையும் விற்றுள்ளது. ஆனால் இந்த மாந்திரீக நடைமுறைகளுக்குப் பயன்படுத்துவதாக விற்கப்படும் இந்த பிணநீரை மக்கள் ஆர்வத்துடன் ஆன்லைனில் வாங்குவது தான் ஆச்சரியத்தின் உச்சம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *