75 வருடங்களுக்குப் பிறகு இணைந்த குடும்பம்!

1947 பிரிவின்போது தனது குடும்பத்தை விட்டு பிரிந்த ஒரு பாகிஸ்தானிய பெண் 75 வருடங்களுக்குப் பின்னர் கடந்த மாதம் முதல் முறையாக தனது இந்திய சகோதரர்களை சந்தித்தார்.

தனது சீக்கிய குடும்பத்திலிருந்து பிரிந்த மும்தாஜ் பீபி, ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவில் தனது சகோதரர்கள் குர்முக் சிங் மற்றும் பல்தேவ் சிங் ஆகியோரை முதல் முறையாக சந்தித்தார்.

எங்கள் வாழ்நாளில் எங்கள் சகோதரியை சந்திக்க முடிந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என குர்முக் சிங் கூறினார்.

1947 பிரிவினை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு சுதந்திர நாடுகளை உருவாக்க வழிவகுத்தது 

போர் மற்றும் பஞ்சத்திற்கு வெளியே மக்களின் மிகப்பெரிய இயக்கமாக இருந்தது. 

ஏறக்குறைய 12 மில்லியன் மக்கள் அகதிகளானார்கள் மற்றும் 5 இலட்சம்  முதல் ஒரு மில்லியன் மக்கள் மத வன்முறையில் கொல்லப்பட்டனர்.

வன்முறையின் போது அவரது மனைவி பாகிஸ்தானில் கொல்லப்பட்டதை அடுத்து, அவர்களது தந்தை பாலா சிங் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலா மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.

தனது மனைவியின் மரணம் பற்றி அறிந்த தனது தந்தை தனது மகளும் கொல்லப்பட்டதாகக் கருதிய அவர், அதைத் தொடர்ந்து அவர் தனது மைத்துனியை மணந்தார் என சகோதரர்களில் இளையவரான பல்தேவ் சிங் கூறியுள்ளார். 

ஆனால் பாகிஸ்தானில், மும்தாஜ் பீபியை தத்தெடுத்து வளர்த்த ஒரு முஸ்லிம் குடும்பம் வளர்த்துள்ளது. 

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு  முன்னர் தமது புதல்வர்கள்  ஒன்றுவிட்ட சகோதரியைப் பற்றி சமூக ஊடகங்களின் உதவியுடன் கண்டுபிடித்ததாக, பல்தேவ் சிங் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *