கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த நாய்!

மனிதன் தான் கின்னஸ் சாதனை செய்வார்கள் என்பதில்லை. வாய் இல்லாத ஜீவனும் செய்திருப்பதை பார்க்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.

நாய் நன்றியுள்ள செல்லப் பிராணி. மற்ற விலங்குகளைக் காட்டிலும், மனிதர்களுடன் நெருங்கி பழகக்கூடியது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கிரீன்கேர்ஸில் பகுதியில் வாழும் சிவாவா எனும் வகையைச் சேர்ந்த டோபி கீத் எனும் நாய் உலகின் மிக வயதான நாய் என்ற பெருமையுடன் கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.

தற்போது 21 வயதாகும் நாய் 2001-ம் ஆண்டு ஜனவரி 9 தேதி பிறந்தது. இந்த நாய் மொத்தம் 21 ஆண்டுகள் 66 நாட்கள் இதுவரை வாழ்ந்துள்ளது. இதன் உரிமையாளர் கிசெலா என்பவர் இந்த நாயை ஒரு வயதான தம்பதியிடமிருந்து வாங்கியுள்ளார். அவர்களுக்கு வயதாகி விட்டதால் அதை பராமரிக்க முடியாமல் தன்னார்வலரான கிசெலாவிடம் தந்துள்ளனர்.

கிசெலா அந்த நாயை வாங்கிய பின் தான் தெரிந்தது இது மிகவும் வயதான நாய் என்று. இதனால் ஆச்சரியமடைந்த கிசெலா,  கின்னஸ் சாதனையில் இடம் பெறச் செய்துள்ளார். இது பற்றி கிசெலா கூறுகையில், “அதற்கு 20 வயது என தெரிந்தபோது அனைவரும் ஆச்சரியப்பட்டோம். டோபிகீத் எனது சிறிய மெய்க்காப்பாளர். எல்லா இடங்களிலும் என்னைப் பின்தொடர்கிறார். நாங்கள் டிவி பார்க்கும்போது என் மீது படுத்துக்கொள்கிறார்” என்று பெருமை பொங்க சொல்லி மகிழ்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *