உலகின் மிக ரகசியமான இராணுவ சுரங்கப்பாதை மறைமுக எச்சரிக்கை விடுக்கும் ஈரான்!

100 ட்ரோன்கள் வரை நிற்கும் மிகப் பிரம்மாண்டமான மற்றும் இதுவரை வெளிவராத ரகசியமான சுரங்கப்பாதை ட்ரோன் தளத்தினை ஈரான் சனிக்கிழமையான இன்று வெளிபடுத்தியுள்ளது.

1979 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு முறிவு முதலே, எண்ணெய் வளைகுடா பகுதிகளில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்குமான பதற்றம் வளரத் தொடங்கியது.

இந்த பதற்றமானது கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த டொனால்டு டிரம்ப் ஈரானுடனான அணுசக்தி ஓப்பந்தத்தில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து இந்தப் பதற்றம் மேலும் பலமடங்கு அதிகரிக்க தொடங்கியதுள்ளது.

இந்தநிலையில், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அடிப்படையாக கொண்டு கடந்த மார்ச் மாதம் கிரீஸ் கடற்பகுதிக்குள் ஈரான் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு வந்த ரஷ்ய கொடி தாங்கிய சரக்கு கப்பலை அமெரிக்கா சிறைப்பிடித்தது.

இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்த ஈரான், பலிவாங்கும் விதமாக நேற்று விதிமுறைகளை மீறியதாக கூறி கிரீஸ் நாட்டிற்கு சொந்தமான இரண்டு சரக்கு கப்பல்களை ஈரான் அதிரடியாக சிறைப்பிடித்தது.

இதனால் தற்போது எண்ணெய் வளைகுடா பகுதிகளில் மீண்டும் மோதல் பதற்றம் அதிகரித்துள்ளது, இந்நிலையில் 100 ட்ரோன்கள் வரை நிற்கும் மிகப் பிரம்மாண்டமான மற்றும் இதுவரை வெளிவராத ரகசியமான சுரங்கப்பாதை ட்ரோன் தளத்தினை ஈரான் சனிக்கிழமையான இன்று வெளிபடுத்தியுள்ளது.

இதுத் தொடர்பாக வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளில் கான்கிரீட் சுரங்க பாதையின் உள், ஆயுதங்களை தாங்கிய 100 ட்ரோன்கள் வரை நிற்பதை வெளிபடுத்தியுள்ளன.

இந்த சுரங்கப்பாதைகள் ஈரானின் மலைப்பகுதிகளுக்கு அடியில் இருப்பதாக தெரிவித்த ஈரான் அதிகாரிகள், ஆனால் அதன் துல்லியமான இடத்தை தெரிவிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, அந்த நாட்டின் State TV தெரிவித்த தகவலில், Qaem-9 ஏவுகணைகளை தாங்கிய Ababil-5 ட்ரோன்கள் உட்பட 100 ட்ரோன்கள் ஜாக்ரோஸ் மலைகளின் மத்தியில் நிற்க வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுத் தொடர்பாக ஈரான் ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்ரஹிம் மௌசவி தெரிவித்த தகவலில், இது ஈரான் இஸ்ஸாமிய குடியரசின் ட்ரோன்கள் பிராந்தியத்தின் மிகவும் சக்திவாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *