மனைவி சித்திரவதை செய்வதாக தலைமை ஆசிரியர் புகார்!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ளது பிவாடி என்ற பகுதியை சேர்ந்தவர் அஜித் சிங் யாதவ். இவர் ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளார். அஜித் ஏழு ஆண்டுகளுக்கு முன் அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்த சுமன் என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆசை ஆசையாக காதலித்து கல்யாணமும் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் இவர்களின் வாழ்க்கை நன்றாகவே சென்றது. ஆனால் நாளுக்கு நாள் அந்த அழகில் ஆபத்து இருப்பது தெரிய ஆரம்பித்தது. சுமன் கடுமையான கோவாக்காரி எதற்கெடுத்தாலும் கோவம் கொண்டு எதையாவது எடுத்து அடிக்க தொடங்கி விடுவார்.

இதனால் பலமுறை அஜித் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்ப்ட்டு வீடு திரும்பி உள்ளார். எப்போது சண்டை வந்தாலும், சுமன் வீட்டு கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டுதான் அடிப்பாரம். சப்பாத்தி கட்டை , கிரிக்கெட் மட்டை கையில் என்ன கிடைக்கிறதோ, அவை அனைத்தும் அஜித்தை அடிக்கும் ஆயுதங்களாக மாறின. எதுவும் கிடைக்கவில்லை என்றால் கணவனின் தலைமுடியை பிடித்து சுவற்றில் மோதவைப்பது, இல்லாவிட்டால் எட்டி எட்டி உதைப்பது என வீடே ரணகளமாகும்.

மனைவியின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால். அஜித்தால் அதற்கு மேல் சமாளிக்க முடியவில்லை. உடம்பில் அடிவாங்க தெம்பும் இல்லாமல் நேராக பொலிசுக்கு சென்றார்.
“என் மனைவி என்னை சித்ரவதை செய்கிறாள் , என்னால் தினமும் அடிவாங்க முடியவில்லை. என்று குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தல் புகார் கொடுத்தார். ஆனால் பொலிஸாரோ, அஜித்குமாரின் புகாரை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அஜித் தொடர்ந்து பொலிஸில் புகார் தந்து கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் சலிப்படைந்துபோன அஜித், பொலிஸை நம்புவதைவிட பேசாமல் கோர்ட்டுக்கு போய்விடலாம் என்று முடிவு செய்தார்.. ஆனால், கோர்ட்டில் ஆதாரங்கள்தானே பேசும்? நமக்கு ஆதரவாக குடும்பத்தில் யாரும் சொல்ல போவதில்லை, அதனால் தகுந்த ஆதாரங்களை நாமலே கோர்ட்டில் காட்டிவிடலாம் என்று யோசித்து, ஆதாரங்களை திரட்ட ஆரம்பித்தார்.

மனைவி தன்னை தாக்குவதுதான் ஒரே முக்கிய ஆதாரம். ஆனால் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அடிப்பதால், வெளியே யாருக்கும் இதை பற்றி தெரிய வாய்ப்பில்லை என்பதால், வீட்டிற்குள்ளேயே மனைவிக்கு தெரியாமல் இரகசிய கேமராக்களை பொருத்தினார் அஜித். வழக்கம்போல மனைவி தனது சுயரூபத்தை காட்டினார். தலைமை ஆசிரியரும் கிரிக்கெட் மட்டை, பூரி கட்டை, என பல வித ஆயுதங்களால் அடிவாங்கியதை விதவிதமாக சிசிடிவி மூலம் பதிவு செய்தார்.

அந்த ஆதாரத்தை எடுத்துக் கொணடு கோர்ட்டுக்கு போனார். நீதிபதியிடம் வீடியோவை காட்டினார் அந்த வீடியோ காட்சிகளை பார்க்க, பார்க்க நீதிபதி அரண்டு போய் விட்டார். நீதிமன்றமே அந்த வீடியோவை பார்த்து அதிர்ந்தது. இதுதொடர்பாக தீர விசாரித்து நடவடிக்கைஎ டுக்க உத்தரவிட்டார். இறுதியில், மனைவியால் தாக்குதலுக்குள்ளாகி தினம் தினம் சித்ரவதைக்கு உள்ளாகும் அஜித்துக்கு பாதுகாப்பு அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த சிசிடிவி காட்சிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இதுகுறித்து அஜித் சிங் யாதவ் கூறியதாவது:- பணியின் கண்ணியத்தை மனதில் கொண்டு வன்முறையை சகித்துக் கொண்டேன். ஆனால் இப்போது என் மனைவி எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டதால் நான் நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்துள்ளேன். நான் சுமனை கைநீட்டி அடித்ததில்லை, சட்டத்தை கையில் எடுத்ததில்லை. நான் ஒரு ஆசிரியர். ஒரு பெண் மீது ஆசிரியர் கையை உயர்த்தி சட்டத்தை கையில் எடுத்தால் அது கலாச்சாரத்திற்கும், அவரது நிலைப்பாட்டிற்கும் எதிரானது என்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *