சக்தி வாய்ந்த ராஜபக்ச குடும்பம் சிதைந்து கொண்டிருக்கிறது!

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த குடும்பம் சிதைந்து கொண்டிருக்கிறது என்று தெ வோஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இலங்கையின் ராஜபக்சர்களின் அரசியல் குடும்பத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் முறுகல் தொடர்பிலேயே இந்த செய்தியை தெ வோஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.

இது ஒருவேளை இலங்கைக்கு சிறப்பானதாக இருக்கலாம் என்று ஒரு ஊடக நிறுவனத் தலைவர் கூறியதாக அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

ராஜபக்சர்களின் அரசியலும், இலங்கையும் சோகத்தில் முடிந்துள்ளது.

இது ராஜபக்சர்களின் சொந்த செயல்களாலேயே ஏற்பட்டது என்றும் அந்த ஊடக நிறுவனத்தலைவர் தெ வோஷிங்டன் போஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஒரு காலத்தில் அப்பச்சி அதாவது மக்களின் அன்புக்குரிய தந்தை எனப் போற்றப்பட்டார்.

இப்போது அவர் தனது இரண்டாவது மாடி படுக்கையறையில் பதுங்கியிருந்தார். இராணுவத்தினர் வந்து தம்மை மீட்குமாறு கோரினார் என்றும் அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ராஜபக்ச சகோதரர்கள் இலங்கையில் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

2005 இல் மஹிந்தவை ஜனாதிபதியாக வெற்றியடையச் செய்த பின்னர், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதிலும் அவர், மக்கள் ஆதரவை உருவாக்கினர்.

எனினும் 2019 ஆம் ஆண்டில், கோட்டாபய ஜனாதிபதியான பின்னர், ​​தெற்காசியாவின் மிகவும் செழிப்பான தேசமும் அழிவுக்கு இட்டுச் செல்லப்பட்டது.

அத்துடன் குடும்பம் சிதைந்துள்ளது. இந்தநிலையில் இலங்கை முழு அழிவை எதிர்நோக்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வம்ச அரசியலைப் பற்றி நாடு பாடம் கற்றுக்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *