கொழும்பில் கொள்வனவு செய்யப்பட்ட பிரியாணியில் எலி தலை?

கொழும்பு – கோட்டை பகுதியில் உள்ள உணவகமொன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட கோழி பிரியாணி பொதியில் எலியின் தலையுடனான பகுதி காணப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (24) இணையதளத்தின் மூலம் இந்த உணவுப்பொதி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த எலியானது கோழி இறைச்சிக்கு பதிலாக உணவுக்காக சேர்க்கப்பட்டிருந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் நேற்று கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,, கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தினால் கொழும்பு மாநகரச் சபை பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனியிடம் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கமைய பிரதான உணவு பரிசோதகர் அடங்கிய குழுவொன்று குறித்த உணவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த உணவக உரிமையாளர் உள்ளிட்ட சேவையாளர்களிடம் முன்னெடுத்த விசாரனைகளின் போது அந்த உணவுப்பொதியில் காணப்பட்டது எலி அல்ல முயல் என தெரிவியவந்துள்ளது.

தமக்கு கிடைக்கப்பெற்ற உணவு பதிவானது கோழி இறைச்சியுடனான உணவு என்பதுடன், தனது கடையில் கோழி இறைச்சி மற்றும் முயல் இறைச்சி போன்ற இரண்டும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த உணவு பதிவுக்காக கோழி இறைச்சிக்கு பதிலாக முயல் இறைச்சியை வைத்து அனுப்பிவிட்டதாகவும் உணவக உரிமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் முயல் இறைச்சி விற்பனை செய்வது பிழை இல்லை என்றும், அதனை விற்பனை செய்வதற்காக கொழும்பு மாநகரச் சபையின் கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பூரண அனுமதியை பெற வேண்டும் எனவும் பிரதம வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அந்த உணவகத்தில் முயல் இறைச்சி விற்பனை செய்ய எந்தவொரு அனுமதி பத்திரமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பம் தொடர்பில் முன்னெடுப்படும் பரிசோதனை முடிவுகள் இன்னும் 2 நாட்களில் கிடைக்கப்பெறுவதுடன், உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ​​ குற்றச்சாட்டுக்களுக்காக 15,000 ரூபா அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *