தெற்காசியாவின் புதிய சூப்பர்ஸ்டாராக உருவெடுத்துள்ள பங்களாதேஷ்!

உலகின் 37வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து, 80% மக்கள் வறுமைகோட்டுக்கு கீழ் இருந்த நிலையை 12%க்கு கீழ் என குறைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது

வங்கதேச வரலாற்றில் இந்த அளவு செழிப்புடன் நாடும், மக்களும் இருந்ததில்லை என்கிறார்கள். முழுபெருமையும் ஷேக் ஹசீனாவின் தலைமைக்கு என சொல்கிறார்கள்.

அண்டைநாடுகள் பாகிஸ்தானும், இலங்கையும் சீனாவை நம்பி மோசம் போக, வங்கதேசம் ஜப்பானுடன் கூட்டணி அமைத்தது. வங்கதேசத்தில் சுமார் $24 பில்லியன் முதலீடு செய்தது ஜப்பான். வங்கதேசத்தில் 5100 கிமி நீளத்துக்கு சாலைகள் அமைத்து அந்த நாட்டின் போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்தையே கொண்டுவந்தது. இரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கவும் நிதி உதவி செய்துள்ளது

வறுமைகோட்டுக்கு கீழ் இருந்த மக்களை மைக்ரோபைனான்ஸ் மூலம் உயர்த்தினார் முகமது யூனுஸ். மைக்ரோபைனான்ஸ் மூலம் பெண்களுக்கு கடன் கொடுத்தார். ஆண்களுக்கு கடன் கொடுத்தால் குடித்து செலவு செய்து விடுவார்கள். பெண்களுக்கு கொடுத்தால் பொறுப்பாக இருப்பர்கள் என நம்பினார். நோபல் பரிசும் பெற்றார். வங்கதேசத்தின் வறுமை ஒழிப்பில் முக்கிய பங்கு முகமது யூனுசுக்கு என சொல்லபடுகிறது

ஆனால் வங்கதேசத்தின் எழுச்சி முழுக்க அதன் பின்னலாடை தொழிலுக்கு என சொல்லலாம். அதன் ஏற்றுமதியில் 82% பின்னலாடை மூலமே வருகிறது.வங்கதேசம் முழுக்க மிகப்பெரும் திருப்பூராக மாறியது என சொல்லலாம். லூயிவிட்டான் உள்ளிட்ட பல பிராண்டுகள் வங்கதேசத்தில் உற்பத்தி செய்கின்றன. சீனாவுக்கு அடுத்து கார்மெண்ட்ஸ் ஏற்றுமதியில் இரண்டாமிடம் வங்கதேசத்துக்கு.

வங்கதேசத்தின் இன்னொரு ஏற்றுமதி தொழிலாளிகள். மாலதீவுகள், வளைகுடா நாடுகளில் ஏராளமான வங்கதேச தொழிலாளிகள் பணியாற்றுகிறார்கள். ஆண்டுக்கு $28 பில்லியன் அன்னிய செலாவணியாக வருகிறது

ஆனால் இந்த மாடல் நீன்டகால வெற்றிக்கு உதவும் என சொல்லமுடியாது. கார்மெண்ட்ஸில் வங்கதேசத்துக்கு கடும்போட்டியாக உருவெடுத்துள்ளது வியட்நாம். 2020ல் வங்கதேசத்தை பின்னுக்கு தள்ளி இரண்டாமிடம் பிடித்தது வியட்நாம்,. ஆனால் 2021ல் மீண்டும் இரண்டாமிடத்தை பிடித்தது வங்கதேசம்

இருக்கும் பொருளாதார முன்னேற்றத்தை பயன்படுத்தி கல்வியில் முதலீடு செய்து மிகப்பெரிய படித்த இளைஞர் சமூகத்தை உருவாக்க திடட்மிட்டுள்ளார் ஷேக் ஹசீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *