இலங்கைக்கு உதவி வழங்க அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் முன்வந்துள்ளார்!

பொருளாதார நெருக்கடியால் நலிவடைந்துள்ள இலங்கைக்கு உதவி செய்ய அமெரிக்காவின் முன்னாள் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சமந்தா முன்வந்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் உரையாடிய போதே இந்த உறுதிமொழியை அவர் வழங்கியுள்ளார்.

கலந்துரையாடலின் போது சமகால நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் , G7 நாடுகள் போன்ற அமைப்புகளுடன் நெருங்கி செயற்படவுள்ளதாகவும் சமந்தா பவர் உறுதியளித்தார் .

இந்த மாத தொடக்கத்தில் அரசியல் அமைதியின்மையால் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த இலங்கையர்களுக்கு அவர் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை மக்களுக்கு தனது ஆதரவை உறுதியளித்தார்.

நாட்டின் நெருக்கடியை சமாளிக்க உதவுவதாகவும் அவர் உறுதியளித்தார். அத்துடன் இலங்கை மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது இலங்கையையும் பாதித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐ.நா சபையில் பகிரங்கமாக விவாதத்திற்கு உட்பட்டிருந்தார். ராஜபக்ஷர்களுக்கு பெரும் சிம்மசொப்பமான திழ்ந்த அமெரிக்க பெண்ணாக இவரை குறிப்பிட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *