அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு இலங்கைப் பெண்கள் தெரிவு!

அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் முதல் முறையாக இலங்கை வசம்சாவளியை சேர்ந்த இரண்டு பெண்கள் அந்நாட்டு சமஷ்டி நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான  இலங்கை பெண்கள்

தொழிற்கட்சியின் சார்பில் விக்டோரியா மாநிலம் மெல்பேர்னின் Higgins தொகுதியில் போட்டியிட்ட இலங்கை வம்சாவளியை சேர்ந்த மருத்துவரான மிச்சேல் ஆனந்தராஜா வெற்றி பெற்றுள்ளார். அவர் 56.1 வீத வாக்குகளை பெற்றுள்ளார். அதாவது 30 ஆயிரத்து 46 வாக்குகளை பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

மிச்சேல் ஆனந்தராஜா தனது சிறுவயதில் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்.

 அதேவேளை அவுஸ்திரேலியா சமஷ்டி பொதுத் தேர்தலில் விக்டோரிய மாநிலத்தில் வசிக்கும் மேலும் மூன்று இலங்கையர்கள் போட்டியிட்டனர்.

இவர்களில் தொழிற்கட்சியின் சார்பில் ஹொல்ட் தொகுதியில் போட்டியிட்ட கேசன்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றுள்ளார்.

இவர் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராஞ்ச் பெரேராவை எதிர்த்து போட்டியிட்டார். 57.5 வீதம் என்ற அடிப்படையில், கேசன்ட்ரா பெர்னாண்டோ 40 ஆயிரத்து 187 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

லிபரல் கட்சியின் வேட்பாளரான ராஞ்ச் பெரேரா 29 ஆயிரத்து 723 வாக்குகளை மாத்திரமே பெற்றார். 

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான  இலங்கை பெண்கள்

லிபரல் கட்சியின் வேட்பாளரான ராஞ்ச் பெரேரா 29 ஆயிரத்து 723 வாக்குகளை மாத்திரமே பெற்றார்.

கேசன்ட்ராவும் தனது 11 வயதில் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியவர்.

அதேவேளை விக்டோரியா மாநிலத்தில் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இலங்கையரான விரோஷ் பெரேரா 17 ஆயிரத்து 385 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிற்கட்சி வேட்பாளர் கிளஸ் அன்ட்ரூ 33 ஆயிரத்து 604 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான  இலங்கை பெண்கள்

அவுஸ்திரேலியாவில் நேற்று நடைபெற்ற சமஷ்டி பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றதுடன் அன்டனி ஹெல்பனிஸ் நாளை பிரதமராக பதவியேற்க உள்ளார்.

தொழிற்கட்சி ஒரு தசாப்த காலத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் ஆட்சிக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *