ரணிலிடம் சரணடைந்த சஜித்தின் முக்கிய உறுப்பினர்களுக்கு  எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி அரசாங்கத்தின் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வது, ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார, வரலாற்றின் புதிய அத்தியாயம் உருவாகியுள்ளதாகவும், உண்மையை உணர்ந்து இன்று சர்வகட்சி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த லச்மன் கிரியெல்ல, எதிர்கட்சியில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தின் சிறந்த செயற்பாடுகளுக்கு உதவியளிப்பதே தமது கொள்கையல்ல என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஸ நாணயக்கார ஆகியோரே அரசாங்கத்தில் இன்று அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *