ஒரே மாதத்தில் 226 மில்லியன் ரூபாவை செலவிட்ட முன்னாள் பிரதமர் செயலகம்!

எதிர்வரும் ஜுன் மாதம் முதல் செலவினங்களை 50 சதவீதமாக குறைக்க பிரதமர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலக பராமரிப்புக்காக ஜனவரி மாதம் 92 மில்லியன் ரூபாய், பெப்ரவரி மாதம் 99 மில்லியன் ரூபாய், மார்ச் மாதம் 226 மில்லியன் ரூபாய், ஏப்ரல் மாதம் 75 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளன. 

அத்துடன், பிரதமர் அலுவலகத்தின் சேவைக்காக வேறு அரச நிறுவனங்களில் இணைக்கப்பட்டிருந்த 26 பணியாளர்கள் அவர்களது உரிய நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஏனைய அரச நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 16 வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறிய பணியாளர்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு பிரதமர் அலுவலக கடமைகளை செய்து செலவுகளை குறைக்க பிரதமர் நடவடிக்கை எடுத்து வருவதாக, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *