மீண்டும் மைத்திரி-ரணில் கூட்டணி! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் தீவிரமடையும் கடும் மோதல்!

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொள்வதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆட்சியில் இணைவோம் என பலர் ஏற்கனவே கட்சித் தலைமைக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த மத்திய குழு கூட்டத்தில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திசாநாயக்க, ஜகத் புஸ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும் பகிரங்கமாக அறிவித்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவர்களின் பெயர்கள் ஏற்கனவே அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் அரசாங்கத்தை சீர்குலைக்காமல் அரசாங்கத்தின் நற்செயல்களுக்கு எதிரணியினர் ஆதரவளிக்க முடியும் எனவும், அதுவே கட்சியின் நிலைப்பாடு எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்திடம் சென்று அமைச்சுப் பதவியைக் கைப்பற்றி நாட்டுக்கு மேலும் சேவையாற்ற வேண்டும் எனவும், இவர்கள் தெரிவித்துள்ளதுடன், இன்று நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் சூடு பிடிக்கும் எனவும் அரசியல் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன