பேராதனை பல்கலைக்கழக விளையாட்டு கவுன்சில் நிதியில் 32இலட்சம் மாயம்!

பேராதனை பல்கலைக்கழகத்தில் நன்கொடைகளாக வரும் நிதி கட்டாயமாக கணக்காய்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலைமை நிதிமுகாமை சட்ட ஏற்பாடாகவோ அல்லது வரையறையாகவோ காணப்படாமையால் அதிகாரிகளால் நிதி மோசடி செய்யும் நிலை தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் தற்போது, வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளரால் 32 இலட்சம் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் நிதி மோசடி காரணமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவர் தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் லமாவன்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

‘விளையாட்டு கவுன்சில்’ என்ற பெயரிலுள்ள வங்கி கணக்கில் வைப்பிலிடப்பிட்டிருந்த 32இலட்சம் ரூபா நிதி காணாமல் போயுள்ளது. இதற்கு காரணமாக இருப்பவர் பணிப்பாளர் தான் என்பதை கண்றிந்துள்ள பல்கலைக்கழக நிருவாகம் முதலில் அதனை மீளப் பெறுவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

பணிப்பாளர் குறித்த தொகையை மீள செலுத்த பல்கலைக்கழக நிர்வாகம் சந்தர்ப்பம் வழங்கியிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தினை பணிப்பாளர் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டாலும் பின்பு அதனை நிராகரித்துள்ளதோடு தான் மோசடியில் ஈடுபடவில்லையென்றும் பதிலளித்துள்ளார்.

பேரதனைப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு கவுன்சில் ஆரம்பிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டு அதற்குத் தலைமைதாங்கியவர்(பெயர் குறிப்பிட விரும்பவில்லை)இ ‘விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்குமாகவே உடற்கல்வி திணைக்களத்தின் கீழ் நிதியமொன்று ஸ்தாபிக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடதிருந்து பெறப்படும் நிதிஇ பல்கலை மைதானத்தினை வெளியாருக்கு வழங்குவதன் ஊடாக பெறப்படும் தொகை ஆகியவற்;றைப் பயன்படுத்தியே இந்தக் கவுன்சில் இயங்க ஆரம்பித்தது’ என்று குறிப்பிடுகின்றார்.

நிதிமோசடி இடம்பெற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்திய பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் லமாவன்ச ‘அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பொறுப்பானவர்களை பதவியில் அமர்த்துவது நாளைய தலைமுறையை சிறந்த ஒரு சமூகமாக உருவாக்கி அதன் மூலமாக எங்களுடைய நாட்டை சிறந்த ஒரு நாடாக மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவே’ என்று சுட்டிக்காட்டுகின்றார்.

‘பொறுப்பில் இருக்கின்ற சிலர் தங்களுடைய பொறுப்புகளை மறந்து செயற்படுவதானது மிகவும் கவலைக்குரியவிடயமாகும். பல்கலைக்கழகத்தில் தொழில் புரிகின்ற அனைவரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன் உதாரணமாக செயற்பட வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன்இ ‘குற்றம் புரிகின்றவர்களுக்கு சரியான தண்டணையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே எதிர்காலத்தில் குற்றம் செய்ய நினைக்கின்றவர்களும் அதனை செய்ய மாட்டார்கள். அதனால் குறித்த மோசடியுடன் தொடர்புடையவர்களான கருதப்படும் பணிப்பாளர்இ அவருக்கு ஒத்தாசைகளைப் புரிந்து இரு அதிகாரிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்’ என்று மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குழுவில் அங்கம் வகிக்கும் ஒருவர்இ ‘விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்களையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்கின்ற பொழுது பொய்யான பெயர்களில் நிறுவனங்களை பதிவு செய்து அதன் மூலமாக தொடர்ச்சியான கொள்வனவுகள் செய்யப்பட்டுள்ளமையை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளோம்’என்று குறிப்பிட்டார்.

அத்துடன்இ ‘இந்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய மூவரையும் தொடர்ச்சியாக விசாரணைகளுக்கு உட்படுத்தவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். விரைவில் எமது குழு முழுமையான அறிக்கையை துணைவேந்தர் உள்ளிட்டவர்களுக்கு சமர்ப்பிப்போம்’ என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

நிதி முகாமைத்துவம் பேணப்பட்டு வரும் பல்கலைக்கட்டமைப்பில் எவ்வாறு மோசடி இடம்பெற்றது என்பது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் நிருவாகத்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் குறிப்பிடுகையில்இ பொதுவாக பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற அந்ததந்தப் பகுதிகளுக்கு பொறுப்பான வங்கிக் கணக்குகள் அனைத்தும் கட்டாயமாக கணக்காய்வு செய்யப்பட்டு அடுத்து வருகின்ற மாணவர்களிடம் கையளிக்க வேண்டும்.இதுதான் பல்கலைக்கழகத்தின் நடைமுறை’ என்கிறார்.

‘ஆனால் உடற்கல்வி திணைக்களத்தின் குறித்த கணக்கைப் பொறுத்த அளவில் தொடர்ச்சியாக கணக்காய்வு செய்யப்படாமல் இருந்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்று இன்னமும் கண்டறியப்படவில்லை. சி சமயங்களில் இரண்டு கணக்குகள் காண்பிக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் நிதி சேகரிப்பில் ஈடுபட்டாலும் அவர்கள் பல்கலைக்கழகத்தின் பெயரை குறிப்பிட்டே நிதி சேகரிக்கின்றமையால் அதற்கு பல்கலைக்கழகமே பொறுப்புக்கூறவேண்டியதாகின்றது’ என்று மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளைஇ நிதி மோசடி சம்பவத்தின் பிரதான நபராக பெயரிடப்பட்டுள்ள உடற்கல்வி திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றியஇ பாலித்த குமாரஇ நிதிக்கையாளுகையில் குழறுபடிகள் காணப்படுவதை ஏற்றுக்கொண்டாலும்இ தான் மோசடி செய்யவில்லை என்று கூறுகின்றார்.

அவர்இ ‘2016ஆம் அண்டு பேராதனை மக்கள் வங்கியில் விளையாட்டு கவுன்சிலுக்கென சேமிப்பு கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் விளையாட்டு கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களில் மூலமாக வங்கி கணக்கில் உள்ள நிதியை அந்த வருடத்திற்கான செலவுகளுக்கு பயன்படுத்வோம்’ என்கிறார்.

‘குறித்த வங்கிக் கணக்கில் உள்ள நிதியானது அரசாங்கத்தின் நிதி இல்லை. இந்த கணக்கில் இருக்கின்ற அத்தனை நிதியும் அந்ததந்த வருடங்களில் உள்ள மாணவர்கள் முயற்சிகளாலும்இ நன்கொடைகளாலும் கிடைக்கின்ற நிதியே ஆகும். உண்மையில் 32 இலட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதானதுஇ செலவு செய்யப்பட்ட நிதிக்கான முறையான ஆவணங்கள் இல்லை என்பதனை அடியொற்றிய குற்றச்சாட்டே ஆகும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும்இ நிதி மோசடி இடம்பெற்றுள்ளதை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் லமாவன்ச உறுதிப்படுத்தியுள்ளதோடு விசாரணைக்குழுவால் நீங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்களே என்று பணிப்பாளராக கடமையாற்றிய பாலித்த குமாரவிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

அச்சமயத்தில் அவர்இ ‘நான் 20 இலட்சம் ரூபாவிற்கான சரியான தறவுகளை தேடிப்பெற்று அதனை விசாரணைக் குழுவில் முன்னிலையானபோது சமர்ப்பித்திருக்கின்றேன். மேலும் 12 இலட்ச ரூபாவிற்கான தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவொரு நிலைமை இருக்கின்றது. அதற்கு காரணம் அந்த காலப்பகுதியில் இருந்த விளையாட்டுத்துறைக்கான தலைவர் செயலாளர்களே.அவர்கள் தற்போது நாட்டிலும் இல்லை’ என்றார்.

அத்துடன்இ ‘விளையாட்டுக் கவுன்சிலில் இருக்கின்ற பணத்தினை தாம் ஈட்டிய பணமாக மாணவர்கள் கருதுவதால் அவர்கள் செலவீனங்களுக்கு முறையான பற்றுச்சீட்டுக்களை சமர்ப்பிப்பது கிடையாது’ என்றும் குற்றம் சாட்டும் அவர்இ 20 இலட்சம் ரூபாவிற்கான விடயங்கள் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் மிகுதி 12 இலட்சம் ரூபாவைத்தான் செலுத்த வேண்டும். ஆனால் பல்கலைக்கழக நிருவாகம் 32இலட்சம் ரூபாவையும் மீளச் செலுத்துமாறு வலியுறுத்துகின்றது. ஆகவே மீண்டும் முறையான விசாரணை தேவை என கோரியிருக்கின்றோம்’ என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில்இ 20இலட்சம் செலுத்தப்பட்டதன் பின்னர் ஏன் பல்கலைக்கழக நிருவாகம் 32இலட்சம் ரூபாவை செலுத்துமாறு வலியுறுத்துகின்றது என்பது குறித்து துணைவேந்தரிடத்தில் வினவியபோதுஇ ‘மீள விசாரணைகள் நடைபெறுகின்றன. விசாரணைக்குழு விரைவில் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம்இ விளையாட்டுக் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் மீதான பணிப்பாளரின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குறித்த கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஒருவர்இ குறிப்பிடுகையில்இ ‘கவுன்சிலின் நிதி பயன்படுத்தப்படுகின்றபோதுஇ தலைவர் அல்லது செயலாளர்இ பொருளாளர் மற்றும் பணிப்பாளர் கையொப்பமிட வேண்டும் என்பதே நியமமாக இருந்தது. இது முறையாக பின்பற்றப்பட்டிருந்தால் மோடிசகள் இடம்பெற்றிருக்காது’ என்றார்.

அதேநேரம் குறித்த நிதிமோசடி இடம்பெற்ற காலப்பகுதியான 2019இல் கவுன்சிலின் பதவியில் இருந்த மாணவர்களை தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளித்திருக்கவில்லை இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு இலக்கான உடற்கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் மீதும் விசாரணைகள் தொடருகின்ற அதேவேளை அதிலொருவர் மிகவிரைவில் ஒய்வுபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *