அவுஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் விபத்தில் உயிரிழப்பு!

அஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் தனது 46வது வயதில் உயிரிழந்துள்ளார்.

இந்த ஆண்டில், கடந்த மார்ச் மாதம், ஆஸ்திரேலியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் மரணமடைந்தார். அதற்கு முன்னதாக, விக்கெட் கீப்பர் ராட் மார்ஷும் இறந்த நிலையில், தற்போது ஓள் ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இறந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்தான் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 90 களில் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவரே இவராகும்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பலியானது எப்படி என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இவரின் கார் வேறு கார் எதிலும் மோதி விபத்திற்கு உள்ளாகவில்லை. மாறாக கார் தடம்புறண்டதில் விபத்து நிகழ்ந்துள்ளது.இலங்கை நேரப்படி நேற்று மாலை 7 மணி அளவில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் ஹெர்வி ரேஞ்ச் ரோடு பகுதியில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.ஆலிஸ் ரிவர் பிரிட்ஜ் பகுதியில்தான் விபத்து நடந்துள்ளது. இந்த பாலம் முடிந்ததும் கார் இடது பக்கம் திரும்பி உள்ளது. ஆனால் கார் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வந்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அப்படியே தடம் புரண்டு, சாலையில் மேலும், கீழும் புரண்டு விபத்துக்குள்ளானது.காரில் அப்போது ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மட்டுமே இருந்துள்ளார். காரில் வேறு யாரும் இல்லை. விபத்து நேர்ந்த போது அருகில் இருந்த சிலர் உடனே அவசர உதவி எண்களுக்கு அழைத்துள்ளனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவருக்கு முதல் உதவி கொடுக்கப்பட்டது. அங்கேயே அவர் மரணம் அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.சைமண்ட்ஸ் பொதுவாக குடிபழக்கம் அதிகம் கொண்டவர். இதனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாரா என்ற கேள்வி உட்பட பல்வேறு கோணங்களில் பொலீசார் விசாரணையை முடுக்கி வருகின்றனர். ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மரணத்திற்கு கிரிக்கெட் உலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *