நிதி பற்றாக்குறையால் பிரித்தானியாவில் அரச பணியாளர்களை குறைக்க திட்டம்!

நிதியை சேமிக்கும் நோக்கில் 91,000 சிவில் சேவை பணியாளர்களை குறைக்க பிரித்தானிய அரசாங்கம் விரும்புகிறது என அந்நாட்டின் உயர்மட்ட அரசு ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை செயலாளர் சைமன் கேஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். மூன்று ஆண்டுகளுக்குள் 2016 பணியாளர் நிலைகளுக்கு திரும்புவதே இதன் நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆட்சேர்ப்பு முடக்கம் அல்லது கட்டாய பணிநீக்கங்களை நிராகரிக்கவில்லை என பிரதமர் அலுவலக அறிவித்துள்ளது.

வியாழன் இரவு அரசு ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், வேலை நீக்கம் “சவாலானது” என்றும், 2016 முதல் சிவில் சேவை பணியாளர்கள் “கணிசமான அளவில்” வளர்ந்துள்ளனர் என்றும் சைமன் கேஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

“செலவைக் கட்டுப்படுத்துவதிலும் சவாலான சூழ்நிலைகளில் வரி செலுத்துவோருக்கு சிறந்த மதிப்பை வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தும் நேரத்தில் இது மிகவும் முக்கியமானது” என்று பிரதமர் நம்புவதாக சைமன் கேஸ் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, 2016 இல் 384,000 அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். எனினும், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறத் தயாரானதால், கடந்த ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 475,000 வரை படிப்படியாக உயர்ந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *