உணவு,எரிபொருள், மருந்து பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க சிறப்பு குழுவை நியமித்தார் ரணில்!

அத்தியவசிய பொருட்கள் மற்றும் சேவை தட்டுப்பாடுகளை துரிதமாக நீக்கி, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது சம்பந்தமான யோசனைகளை பெற்று, அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிறப்பு குழுவை நியமித்துள்ளார்.

இந்த குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன,கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, உப தலைவர் அகில விராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உணவு,எரிபொருள், மருந்து,பசளை பிரச்சினைகளை உடனடியாக  தீர்க்க சிறப்பு குழுவை நியமித்த ரணில்

இதனடிப்படையில் அத்தியவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடுகள் இன்றி மக்களுக்கு வழங்குவதற்காக அவற்றுடன் சம்பந்தப்பட்ட துறைகளுடன் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் பொறுப்புவஜிர அபேவர்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தவிர மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாணும் பொறுப்பு ருவான் விஜேவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் பசளை நெருக்கடிக்கு தீர்வுகாணும் பொறுப்பு அகில விராஜ் காரியவசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *