இன்று மாலை பிரதமராக ரணில் பதவியேற்கிறார்!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணியளவில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய, ரணில் இன்று 6ஆவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு (11) முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் திட்டம் மற்றும் எதிர்கால நடவடிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகள் எவரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை என்றும், அவர்களும் எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வருவார்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை தொடர்ந்து புறக்கணித்து வருவதன் காரணமாக இந்த தீர்மானத்திற்கு வந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *