ஈகுவேடர் சிறையில் ஏற்பட்ட மோதலில் 44 கைதிகள் உயிரிழப்பு!

ஈகுவேடர் சிறையில் ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலைகளில் அடிக்கடி கைதிகள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் நடந்து வருகிறது. தலைநகர் குய்டோவில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாண்டோ சாமிங்கோ நகர் சிறையில் இருதரப்பு கைதிகளுக்கு இடையே திடீர் மோதல் வெடித்தது. ஆயுதங்களை கொண்டு சிறை கைதிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பயங்கர கலவரம் வெடித்தது. இந்நிலையில், வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

கலவரத்தில் காயம் அடைந்த கைதிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கலவரத்தை பயன்படுத்தி, சுமார் 220 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடிய நிலையில், 112 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான கைதிகளை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே பலியான கைதிகளின் உடல்களை பெற அவர்களது உறவினர்கள் பிணவறையில் காத்திருந்தனர். கடந்த ஆண்டு இதேபோன்று நடைபெற்ற சிறை மோதல்களில் 316 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *