ஒரே நீச்சல் குளத்தில் ஆண்கள்,பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாம்!

பாலின சமத்துவத்தை உருவாக்குதல் அல்லது அனைத்து பாலினத்தவர்களுக்கும் சுதந்திரத்தை உறுதிப்படுவதில் ஜெர்மனியைச் சேர்ந்த இயக்கங்கள் தீவிர செயல்பாடுகளை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் ஜெர்மனியின் கோட்டிகன் நகரில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் ஆண், பெண் இருபாலரும் மேலாடையின்றி குளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு பாலின அடையாள பிரச்சனைதான் இந்த முடிவுக்கு வழிவகுத்திருக்கிறது. கோட்டிகனிலுள்ள ஒரு நீச்சல் குளத்தில் ஒருவர் மேலாடையின்றி குளித்துக்கொண்டிருக்கிறார். இதனைப் பார்த்த நீச்சல் குள ஊழியர் ஒருவர் அவரை மேலாடை அணியுமாறு கூறியிருக்கிறார். ஆனால் மார்பகங்கள் தெரியுமாறு குளித்துக்கொண்டிருந்தவர் தான் ஒரு ஆண் என தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறார். இதனால் அங்கு பாலின அடையாள விவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த பிரச்சனை முற்றியதால் இனி நீச்சல் குளங்களில் ஆண்களையும் பெண்களையும் மேலாடையின்றி நீந்த அனுமதிக்க வேண்டும் என ஸ்போர்ட்ஸ் கிளப்கள் முறையிட்டிருக்கின்றன. இதனால் ஆண்களும் பெண்களும் வார இறுதியில் நீச்சல் குளத்தில் மேலாடையின்றி குளிக்கலாம் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது.

ஆனால் மேலாடையின்றி குளிக்க அனுமதிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படிச் சமாளிப்பது என நீச்சல் குள ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கான விதிமுறைகள், வரையறைகள் எங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

ஜெர்மனியில் Free Body, Free nipil போராட்டங்கள் அடிக்கடி நடக்கக்கூடியவை. மேலாடையின்றி குளிக்கும் அறிவிப்புக்கும் “வார இறுதியின் மட்டும் தான் பாலியல் சமத்துவமா?” எனக் கேள்வி எழுப்புகின்றனர் பாலியல் சமத்துவ செயல்பாட்டாளர்கள்.

கடந்த கோடை பருவத்தில் மேலாடையின்றி சூரிய குளியல் எடுத்துக்கொண்டிருந்த ஒருவரை காவல்துறை கைது செய்ததைத் தொடர்ந்து பல பெண்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *