ரஷ்யாவின் மிக ஆபத்தான கூலிப்படையை மொத்தமாக பழி தீர்த்த உக்ரைன்!

கொடூரர்கள் என அறியப்படும் ரஷ்யாவின் மிக ஆபத்தான கூலிப்படையினர் ஆயிரக்கணக்கானோர் உக்ரைனில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தது. இதில் ரஷ்ய ராணுவத்தினருடன் Wagner குழு என்ற மிக ஆபத்தான கூலிப்படையும் களமிறக்கப்பட்டது.

ஆனால், 8,000 பேர்கள் உக்ரைனில் களமிறங்கியதில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.

அதில், Wagner கூலிப்படையில் சுமார் 3,000 பேர்கள் இதுவரை உக்ரைனில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனிப்பட்ட இராணுவம் என அறியப்படும் Wagner கூலிப்படையானது, களமிறக்கப்பட்ட உலக நாடுகளில் பலவற்றில் கொலை, வன்கொடுமை, போர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் களமிறங்கும் முன்னர் குறித்த கூலிப்படையானது சிரியாவில் செயல்பட்டு வந்துள்ளது. Wagner உட்பட மொத்தம் மூன்று கூலிப்படைகள் உக்ரைனில் களமிறக்கப்பட்டுள்ளது. இதில், வெளியாகியுள்ள எண்ணிக்கையை விட இவர்கள் பல மடங்காக இருக்கலாம் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *