சொந்த வீட்டை குண்டுவீசி தகர்க்க சொன்ன கோடீஸ்வரர் கூறிய காரணம்!

உக்ரைனிய கோடீஸ்வரர் ஒருவர் தனது சொந்த மாளிகையை குண்டு வீசி தகர்த்துவிடுமாறு ஆயுத படைகளை கேட்டுக்கொண்டது தெரியவந்துள்ளது.

உக்ரைனில் TransInvestService எனும் ஐடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆண்ட்ரே ஸ்டாவ்னிட்சர் (Andrey Stavnitser) எனும் தொழிலதிபர் தான் உக்ரைனிய இராணுவத்திடம் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

உக்ரைனில் போர் தொடங்கியதையடுத்து குடும்பத்துடன் போலாந்துக்கு சென்ற அவர், தனது பாதுகாப்புக் குழு உறுப்பினர்களை தனது புதிதாக கட்டப்பட்ட மாளிகையில் விட்டுச் சென்றுள்ளார்.

மேலும், தனது வீடு மற்றும் நிலத்தைச் சுற்றி வெப் காமெராக்களை பொறுத்திச் சென்றுள்ளார். இதன் மூலம் தனது வீட்டை தொடர்ச்சியாக கண்காணித்தது வந்துள்ளார்.

ஆனால், இந்த கமெராக்கள் மூலமாக அவருக்கு பல் அதிர்ச்சியூட்டும் விடயங்கள் தெரியவந்தது. ரஷ்ய வீரர்கள் தனது நிலத்தில் நிலைகொண்டிருப்பதையும், பல்வேறு வகையான ராணுவ உபகரணங்களை கொண்டு வந்துள்ளனர்.

இதைப் பார்த்த ஸ்டாவ்னிட்சர் தனது மாளிகையின் ஆயங்களை உக்ரைன் ஆயுதப் படைகளிடம் கொடுத்து அதை வெடிகுண்டு வைத்து தகர்க்க சொன்னார்.

இது குறித்து பிரித்தானிய தொலைக்காட்சியான ITV-ல் குட் மார்னிங் பிரிட்டன் நிகழ்ச்சியில் பேசிய அவர், இது தனது தெளிவான முடிவு என்றும் ரஷ்ய துருப்புக்கள் தனது வீட்டில் சுற்றி வருவதைப் பார்த்து ‘வெறுக்கத்தக்கதாக உணர்ந்ததாகவும், தனது வீட்டையும் நிலத்தையும் ரஷ்ய நடவடிக்கைகளின் தளமாகப் பயன்படுத்துவதாகவும் கூறினார்.

கமெராவில் தனது மாளிகையை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதைக் கண்ட அவர், ரஷ்யாயர்கள் அருகிலுள்ள வீடுகளையும் கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டினார்.

“அவர்கள் மற்ற வீடுகளில் இருந்து பொருட்களை என் வீட்டிற்கு கொண்டு வருவதை நான் கண்டேன், மேலும் அங்கிருந்து டிரக்களில் டி.வி.கள், ஐபாட்கள், கணினிகள், மற்றவர்களின் தனிப்பட்ட உடமைகளை ஏற்றிச் செல்வதை நான் கண்டேன். நான் வெறுப்படைந்தேன். என் வீட்டிற்குள் சிலர் நடந்து செல்வதைப் பார்த்து நான் ஆசிங்கமாக உணர்ந்தேன்” என்று கூறினார்.

மேலும், தனது நிலத்தில் 12 ராணுவ வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டதாகவும், சில டொர்னாடோ ராக்கெட் லாஞ்சர் அமைப்புகளைக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இறுதியாக, உக்ரைன் வெற்றிபெற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாகவும், ஏனென்றால் ஐரோப்பாவின் பாதுகாப்பை உக்ரைன் பாதுகாக்க்கும் என்றும் ரஷ்யர்களை உக்ரைன் நிலத்திலிருந்து வெளியேற்றுவது முக்கியம் என்று கூறிய அவர், ஏதோ தன்னால் முடிந்ததை செய்ததாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *