ஸ்பைடர் மேன் படத்தை 292 முறை பார்த்து இளைஞர் கின்னஸ் உலக சாதனை!

ஸ்பைடர் மேன் படத்தை 292 முறை பார்த்த இளைஞர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் ராமிரோ அலனிஸ் என்ற இளைஞர்.

இவர், கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை 292 முறை “ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்” படத்தைப் பார்த்துள்ளார். சூப்பர் ஹீரோ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக அவர் 720 மணிநேரம் அல்லது 30 நாட்கள் செலவிட்டுள்ளார்.

இந்த படத்தை பார்க்க டிக்கெட்டுகளுக்காக மட்டும் $3,400 (தோராயமாக ₹ 2.59 லட்சம்) செலவிட்டு இருக்கிறார். இவர் ஏற்கனவே அலனிஸ் இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு அவெஞ்சர்ஸ்: எண்ட்கேமை 191 முறை பார்த்து சாதனை படைத்தவர்.

ஆனால் அந்த சாதனையை 2021 இல் ஆர்னாட் க்ளீன் என்ற இளைஞர் “Kaamelott First Installment” திரைப்படத்தை 204 முறை பார்த்து முறியடித்தார். தற்போது 292 முறை ஸ்பைடர்மேன் படத்தைப் பார்த்ததன் மூலம் அவர் ஏற்கனவே முறியடிக்கப்பட்ட தன் கின்னஸ் உலக சாதனையை மீட்டு எடுத்துள்ளார்.

இந்த கின்னஸ் சாதனை பதிவை முயற்சிக்கும் நபர் வேறு எந்தச் செயல்பாடும் இல்லாமல் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.

அதாவது, தூங்கவோ, இடைவேளை எடுக்கவோ கூடாது. டைட்டில் கார்டு முதல் எல்லா கிரெடிட்களையும் சேர்த்து, ஒவ்வொரு முறையும் திரைப்படத்தைப் பார்க்க வேண்டுமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *