எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிப்பொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என இலங்கை கனியவள தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டு விடுமுறையில் சென்ற எரிப்பொருள் கொள்கலன் தாங்கி ஊர்தி சாரதிகளில் குறிப்பிடத்தக்க அளவானோர் சேவைக்கு சமூகமளித்துள்ள நிலையில் கனியவள கூட்டுத்தாபன எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிப்பொருள் விநியோக நடவடிக்கைகள் ஓரளவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஏ.எம். அதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

கனியவள கூட்டுத்தாபன சேவையாளர்கள் மற்றும் எரிப்பொருள் தாங்கி ஊர்திகளின் சாரதிகள் கடந்த 2 நாட்களாக புதுவருட விடுமுறையில் சென்றதன் காரணமாக எரிப்பொருள் விநியோகம் தாமதமாகியுள்ளது.

இதேநேரம், லங்கா ஐ.ஓ.சி நிறுவன ஊழியர்களுக்கு புத்தாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையால் எதிர்வரும் திங்கட்கிழமை வரை எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் கொள்கலன் தாங்கி ஊர்தி சாரதிகள் மற்றும் ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிப்பதை அடுத்து லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் வழமை போல இடம்பெறும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *