இறந்ததாக நாடகமாடி 2 குழந்தைகளைப் பெற்ற பெண்ணுடன் குடும்பம் நடத்திய இளைஞர்!

நெல்லை அருகே இறந்ததாக நாடகமாடி ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற பெண்ணை வெளியூருக்கு அழைத்துச்சென்று குடும்பம் நடத்திய வாலிபர் போலீசில் சிக்கினார். நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே வல்லவன்விளையைச் சேர்ந்த பிள்ளையாண்டி மகன் பவித்ரன் (25). கார் எலக்ட்ரீசியன். இவர், கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி கடலில் மீன் பிடிக்கச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு தூண்டிலோடு பைக்கில் சென்றார்.

அப்போது அவர் செல்போனை வீட்டில் வைத்து விட்டுச் சென்றார். மீன்பிடிக்க சென்ற பவித்ரன், இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் பிள்ளையாண்டியும், உறவினர்களும் கடற்கரைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவரது பைக்கும், செருப்புகளும் மட்டும் இருந்தன. உடனே அவர்கள், பவித்ரனை மீன் பிடிக்கும் போது கடல் அலை இழுத்துச் சென்றிருக்குமோ என்ற சந்தேகத்தில் உவரி போலீசில் புகார் செய்தனர். உவரி போலீசார் வழக்குப் பதிவு செய்து பவித்ரனை தேடி வந்தனர்.

திசையன்விளை அருகே ராமன்குடியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி சாந்தி (32). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சாந்தி குழந்தைகளை விட்டுவிட்டு இந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி திடீரென்று மாயமானார். அவரது செல்போனும் வீட்டில் இருந்தது. இதுகுறித்து சதீஷ் உவரி போலீசில் புகார் செய்தார். உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியை தேடி வந்தனர். இதற்கிடையே கடந்த வாரம் பிள்ளையாண்டி வீட்டு முன்பு நிறுத்தியிருந்த கார் திடீரென்று மாயமானது.

இதுகுறித்து உவரி போலீசில் பிள்ளையாண்டி புகார் செய்தார். அப்ேபாது உவரி இன்ஸ்பெக்டர் செல்விக்கு, ‘‘பொறி’’ தட்டியது. ஏற்கனவே மாயமான பிள்ளையாண்டி மகன் பவித்ரனும், சாந்தியும் ஒரே மாதிரி செல்போனை வீட்டில் வைத்து விட்டு மாயமாகி உள்ளனர். இதற்கிடையே பிள்ளையாண்டியின் காரும் மாயமாகி உள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் ஏதோ ஒரு நகரத்தில் ஒன்றாக இருக்கலாம், ஊர் சுற்றுவதற்காக காரை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று செல்வி சந்தேகித்தார். அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வந்தார்.

அப்போது சாந்தி, வேறொரு ‘சிம்’ மூலம் சிலரிடம் போனில் பேசுவதாக உவரி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த செல்போன் எண்ணை, சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கண்காணித்ததில், அது உளுந்தூர்பேட்டையை அடையாளம் காட்டியது. இதையடுத்து உவரி இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் உளூந்தூர்பேட்டைக்கு சென்றனர். அங்கு ‘டவர் சிக்னல்’ காட்டிய இடத்தை கண்டுபிடித்த போது, அங்கு பிள்ளையாண்டி வீட்டில் மாயமான கார் நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த வீட்டுக்கு சென்று பார்த்ததில் அங்கு பவித்ரனுடன், சாந்தி குடும்பம் நடத்துவது தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும், காரையும் மீட்டு உவரி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். மாயமாவதற்கு முன்பிருந்தே பவித்ரனுக்கு சாந்தியோடு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இறந்துவிட்டதாக நாடகமாடி அதன்பிறகு சாந்தியை வெளியூருக்கு அழைத்துச் சென்று குடித்தனம் நடத்த பவித்ரன் முடிவு செய்துள்ளார். அவர் திட்டமிட்டபடியே எல்லாமும் நடந்துள்ளது.

அவர் கார் எலக்ட்ரீசியன் என்பதால், தந்தையின் காரை சுலபமாக திருடிச் சென்றபோது, பவித்ரனின் குட்டு அனைத்தும் வெளிப்பட்டு விட்டது. உவரி போலீஸ் ஸ்டேஷனில் இரு குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாந்தி, ‘‘நான் பவித்ரனுடன் தான் வாழ்வேன்; சதீஷூடன் செல்ல மாட்டேன்’’ என்று கூறி கதறி அழுதார். மேலும் 2 குழந்தைகளையும் தன்னிடம் ஒப்படைக்கும்படி கூறினார். ஆனால் போலீசார்,‘‘நீ இப்போது இருக்கும் நிலைமையில் உன்னிடம் குழந்தைகளை ஒப்படைக்க முடியாது.

குழந்தைகள் சதீஷிடமே இருக்கட்டும். உனக்கு குழந்தை வேண்டும் என்றால் கோர்ட்டில் மனுச் செய்து பெற்றுக்கொள்.’’ என்று கூறி, திசையன்விளை அருகே தலைவன்விளையில் உள்ள அவரது தாயாரை அழைத்து சாந்தியை ஒப்படைத்தனர். திருமணமாகாத வாலிபர் தான் இறந்ததாக நாடகமாடி, திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பெண்ணை வௌியூருக்கு அழைத்து குடும்பம் நடத்திய சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *