ஜனாதிபதி கோத்தபாய பதவி விலகினால் அடுத்த ஜனாதிபதி யார்?

சகிக்கமுடியாத மானிட அவலங்கள் நிகழும் போது அதற்கு காரணமானவர்களை எதிர்த்து மக்கள் வீதிக்கு வருவது இயல்பானதுதான்.

இன்று நாட்டில் நடந்துகொண்டிருக்கும் எழுச்சிக்குள் இனங்ளுக்கிடையிலான புரிதல் மெள்ளத் துளிர்ப்பதை அவதானிக்க முடிகிறது.
இதை சகிக்க முடியாத சக்திகள் எதிரவினை திட்டங்களை வகுக்கலாம்.
சிறிய கவனக்குறைவும் பாரிய விபரீதத்தை ஏற்படுத்தலாம்.
ஈஸ்தர் தினமும் நெருங்குகிறது.
அவதானத்தை கூர்மையாக்க வேண்டும்.

மானிட நேயமுள்ள ஒவ்வொருவரும் இந்த மக்கள் எழுச்சியை மனதார ஆசீர்வதிப்பார்கள்.

கோத்தாவை வீட்டுக்கு அனுப்புவதே களத்தில் நிற்போரின் கோசமும் நோக்கமும்.

துரதிஷ்டவசமாக கோத்தா போனால் அடுத்தது யாரென்பதில் எவருக்கும் தெளிவான நிலைப்பாடில்லை.

நாடு முகங்கொடுத்துள்ள இன்னல்களுக்கு இடையில் இன்னொரு தேர்தலை இப்போது நடத்துவது பொருத்தமற்றது என்பதிலும் பொது உடன்பாடு தெரிகிறது.

தவிர்க்க முடியாமல் கோத்தா ராஜினாமா செய்தால் தற்காலிக ஜனாதிபதியாக பதவியிலிருக்கும் பிரதமர் அரசியலமைப்பின்படி நியமிக்கப்படுவார்.

இரண்டுமுறை ஜனாதிபதியாக இருந்தவர் மூன்றாவது முறை ஜனாதிபதியாக பதவி வகிக்கலாமா என்ற சட்ட சர்ச்சை தோன்றலாம்

இருமுறை ஜனாதிபதியாக இருந்தவர் மேலுமொரு முறை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக வருவதற்கே அரசியலமைப்பு தடைவிதித்துள்ளது.
வேறு வழிகளில் ஜனாதிபதி பதவி வகிப்பதற்கு எந்த தடையுமில்லை என்று நீதிமன்றம் தீரப்பளிக்கவும் சாத்தியம் இல்லாமலில்லை.

மகிந்த ராஜபக்ஷ் புதிய ஜனாதிபதியாக பாராளுமன்றத்தால் நிரந்தரமாக்கப்படலாம்.

அல்லது ரணில், சஜித், அனுர ஆகிய மூவரில் ஒருவரை பாராளுமன்றம் தேர்வு செய்யலாம்.

அனுரவிடம் பொருளாதார திட்டம் இருக்கிறது.
காத்திரமான திட்டம்.
நாட்டிலுள்ள இல்மனைட் வளத்தை மெருகூட்டும் திட்டமொன்றை ஹந்துன்நெட்டி அண்மையில் துல்லியமாக விபரித்தார்.

சர்வதேச பொருளியளாரர்களின் கவனத்தை இலங்கை இல்மனைட் ஈர்த்தது.
பல நாடுகள் முதலீட்டுக்கு இப்போதே தயாராகிவிட்டன

மிக குறுகிய காலத்துக்குள் எல்லா கடனிலிருந்தும் நாட்டை மீட்டெடுக்க இத்திட்டம் போதுமென ஹந்துன்நெட்டி கணக்கும் காட்டினார்.
தவிரவும் வீட்டுப்பயிர் வளர்ப்புத் திட்டமும் அனுரவிடம் உண்டு.
இவை தவிர நீண்டகால திட்டங்கள் பல.

என்றாலும் விரக்தியின் உச்சத்திலிருக்கும் மக்களுக்கு அவசரமாக நிவாரணத்தை வழங்க இந்த திட்டங்களால் சாத்தியமில்லை.

ரணில் விக்கிரமசிங்கவிடம் நீண்ட கால திட்டங்களுடன் உடணடி தீர்வும் கைவசமுண்டு.

IMF, ADB, EU, ME, UK USA, INDIA,CHINA Rescue Consortiumமூடாக அவசர நிவாரணத்தை பெற்றுக்கொள்வது ரணிலின் Emegency rescue plan.

பெற்றோல் தொட்டு பால்மா வரை தட்டுப்பாட்டிலுள்ள பொருட்களை இயன்றளவு இறக்குமதி செய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை அவசரமாய் மீட்டுக்கொடுப்பது ரணிலின் திட்டம்.

சஜித் எந்த திட்டத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை.

நன்றி-அரசியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *