ஜனாதிபதி பதவி விலகவேண்டிய அவசியமில்லையாம்!

ஜனாதிபதி பதவி விலகவேண்டிய அவசியமில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிலைநாட்டவேண்டிய தேவையில்லது அது சாத்தியமானால் ஜனாதிபதி பதவி விலகவேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

113 பெரும்பான்மையை நிரூபிக்ககூடிய எந்தகட்சியிடமும் அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி தெளிவாக தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வீதிகளிற்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை தங்கள் பிள்ளைகளிற்கு ஆபத்தை ஏற்படுத்தவேண்டிய பொதுச்சொத்தை சேதப்படுத்தவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

113 ஆசனங்களை பெறுவதன் மூலம் எந்த கட்சியும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவாக தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களை அமைதிப்படுத்துவதற்கு அரசியல்கட்சிகள் தங்கள் கருத்துவேறுபாடுகளை மறந்துவிட்டு ஒன்றுபடவேண்டும் ஏற்கனவே சீற்றமடைந்துள்ள மக்கள் குறித்து அவசர முடிவுகளை எடுத்தால் அது நாட்டை இருண்டபாதைக்கு இட்டுச்செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1988-89 போன்று அரசியல்வாதிகள் அவசரஅவசரமாக தீர்மானங்களை எடுத்த இருண்ட வரலாறு இலங்கைக்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *