இறந்த மகனின் உடலை 10 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற தந்தை!

சத்தீஸ்கரில் மகளின் உடலைத் தந்தை தோளில் சுமந்தே நடந்து சென்ற வீடியோ கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது மகள் சுரேகாவை, அங்குள்ள சுகாதார மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.கடந்த சில நாட்களாக அதிக காய்ச்சலால் அந்த சிறுமியின் உடலில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்துள்ளது.

சுகாதார மருத்துவ மையத்தில் அவளது உடல்நிலை மிகவும் மோசமைடைந்து சிறுமி உயிரிழந்து விட்டதாக அங்குப் பணியும் மருத்துவர் வினோத் பார்கவ் தெரிவித்துள்ளார்.

இதைனையெடுத்து உயிரிழந்த சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவியை உறவினர்கள் கோரியுள்ளனர்.  மற்றொரு சடலம் விரைவில் வரும்  அதுவரை காத்திருங்கள் என்று மருத்துவ மையத்தில் இருந்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இறந்த மகளின் உடலைத் தோளில் சுமந்தவாறு ஈஸ்வர் தாஸ் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராமத்தை நோக்கி சாலையில் நடந்து சென்றுள்ளார். தனது மகளின் சடலத்தைத் தந்தை தோளில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதனையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சிங் தியோ உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளரிடம் அமைச்சர் சிங் தியோ கூறியது நான் அந்த வீடியோவை பார்த்தேன். மிகவும் வேதனையாக உள்ளது என்றார். இந்த விகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரியிடம் கூறியுள்ளேன். சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்டு பணியைச் செய்ய முடியாதவர்களை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன் என்று தெரிவித்தார்

என்று தெரிவித்தார். “பணியில் இருந்த சுகாதார பணியாளர்கள் வாகனத்திற்காகக் காத்திருக்க குடும்பத்தை வற்புறுத்தியிருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்திருக்க வேண்டும்,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *