இலங்கையின் இரு பிரபல பத்திரிகைகள் நாளை முதல் இடைநிறுத்தம்!

அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரண்டு பத்திரிகைகள் தங்கள் அச்சுப்பதிப்புகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பை  அவற்றின் உரிமையாளர் இன்று வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் நிதிபேரிடருக்கு புதிதாக பலியாகியுள்ளவையாக இந்த பத்திரிகைகள் காணப்படுகின்றன.
22மில்லியன் சனத்தொகையை கொண்ட தென்னாசிய நாடு 1948ம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் மிக மோசமான நிதி பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்புகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குறைவாக காணப்படுகின்ற நிலையிலேயே இந்த நிலையேற்பட்டுள்ளது.

உபாலி நியுஸ்பேப்பர்ஸ் நிறுவனம் ( தனியார்-) தங்களுடைய ஆங்கில நாளிதழான ஐலண்டையும் திவயினவையும் ஒன்லைன் மூலம் மாத்திரம் வாசிக்க முடியும் – அச்சுத்தாள் தட்டுப்பாடே இதற்குக் காரணம் என அறிவித்துள்ளது.

இலங்கையின் பல்வேறு கொள்கைகளைக் கொண்ட நாளிதழ்கள் விலைகள் அதிகரிப்பு காரணமாகவும் வெளிநாடுகளில் இருந்து அச்சுத்தாள்களை பெற்றுக்கொள்வதில் காணப்படும் நெருக்கடி காரணமாகவும் தங்கள் பக்கங்களை குறைத்துக்கொண்டுள்ளன.
இதே காரணங்களிற்காக பரீட்சைகளை ஒத்திவைக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர்கள் பற்றாக்குறை காரணமாக மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அனைத்துவகையான விலைகளும் அதிகரித்துள்ளன.

பெப்ரவரியில் பணவீக்கம்17.5 வீதமாக காணப்பட்டது- ஐந்தாவது மாதமாக பணவீக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.
எரிபொருளை பெறுவதற்காக வாகனங்களுடன் மக்கள் காத்திருக்கின்றனர்- நீண்டநேரம் காத்திருந்ததால் நால்வர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *