நாடு முழுவதும் இன்றும் மின்வெட்டு!

இன்றும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு அமுலாக்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய A முதல் L வரையான வலயங்களில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலமும், 15 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த வலயங்களில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில், 2 மணிநேரமும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் P முதல் W வரையான வலயங்களில் இன்று மாலை 4.30 முதல் இரவு 9.30க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *