சுரேஷ் ரெய்னாவின் நிலைமைக்கு இதுவே காரணம் சங்கக்கார தெரிவிப்பு!

இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் சுரேஷ் ரெய்னாவின் தற்போதைய ஃபார்ம் டி-20 போட்டிகளுக்கு பொருந்தாது என நம்புவதாக இலங்கையின் முன்னாள் கேப்டன் மற்றும் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் கடந்த மாதம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெற்று முடிந்தது. இதில் சென்னை அணியின் முன்னணி நட்சத்திர வீரர் மற்றும் ரசிகர்களால் Mr.IPL என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா எந்த அணியாலும் எடுக்கப்படாமல் விலைபோகாத வீரராக கருதப்பட்டார்.

இதனிடையே IPL போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் ரெய்னாவை சென்னை அணியே ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில் அது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சுரேஷ் ரெய்னாவின் தற்போதைய ஃபார்ம் டி-20 போட்டிகளுக்கு பொருந்தாது என தான் நம்புவதாக இலங்கையின் முன்னாள் கேப்டன் மற்றும் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடாததும், உள்ளுர் போட்டிகளில் கூட சரியாக பங்கேற்காத நிலையில் அவரின் பேட்டிங் ஃபார்மை குறித்த நம்பத்தன்மையின் அடிப்படையில்  அணி நிர்வாகங்கள் கருத்தில் கொண்டு ஏலத்தில் எடுப்பதை தவிர்த்து இருக்கின்றனர் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, வீரர்களின் மதிப்பீடுகள் ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டு இருப்பதும்,புதிய புதிய வீரர்களின் தோற்றம் மற்றும் புகழின் காரணங்களால் அணி நிர்வாகங்கள் இளம் வீரர்களின் பக்கம் கவனத்தை திரும்புகின்றன எனவும் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *