இன்று முதல் மதுபான விலைகள் அதிகரிப்பு!

இன்று (15) முதல் அமுலாகும் வகையில் மதுபானங்களின் விலைகளை அதிகரிக்க மதுபான நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி, மதுபான விலை உயர்வு தொடர்பிலான அறிவிப்பை அந்தந்த நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, “அதி விசேஷம்” 750 மில்லிகிராம் 100 ரூபாவினாலும், 375 மில்லிலீற்றர் 60 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 180 மில்லிலீற்றர் 30 ரூபாவினாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, உள்ளூர் பியரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *