வாகனக் குத்தகை தவணைக் கட்டணம் செலுத்துவதில் நெருக்கடி நிலை!

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக வாகனக் குத்தகை தவணையைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உரிய நிறுவனங்கள் நிவாரணம் வழங்கவில்லை என குத்தகை மற்றும் கடன் செலுத்துவோரின் கூட்டுச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த விடயத்தில் மத்திய வங்கி தலையிடாது என அதன் ஊடகச் செயலாளர் அசங்க சுமேத தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,
“இதுவரை செலுத்தாத தவணைகளைச் செலுத்துவதற்கு, லீசிங் நிறுவனங்கள் மார்ச் 31ஆம் திகதிக்குள் சலுகை வழங்கப்படும் என காத்திருக்கின்றன. குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்தும் அனைவருக்கும் ஆபத்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் குத்தகை மற்றும் கடன் செலுத்துபவர்கள் மேலும் மேலும் ஆதரவற்றவர்களாக மாறி வருகின்றனர்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோர் மற்றும் சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் எரிவாயு, பெற்றோல் மற்றும் டீசல் பிரச்சினைகளுடன் ஒன்றிணைகின்றனர்.
இவற்றின் மூலம் பிரீமியம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *