ரஷ்யாவின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்!

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ ஹெலிகோப்டேரை அந்த நாட்டின் ராணுவம் அதிரடியாக சுட்டி வீழ்த்தியுள்ளனர், மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் அந்த நாட்டின் ஆயுதப்படை பாதுகாப்பு துறையினர் வெளியிட்டுள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையே இரண்டு சுற்றுப் பேச்சுவார்தைகள் நடைபெற்று முடிந்துள்ள போதிலும், உக்ரைன் மீதான போரை ரஷ்யா இன்னும் தொடர்ந்து வருகிறது.

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனின் ராணுவ துருப்புக்களின் எண்ணிக்கை மிக குறைந்த பலம் கொண்டதாக கருதப்பட்டாலும், ரஷ்யாவை எதிர்த்து ஒருவாரத்திற்கும் மேலாக உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனின் நிலப்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்யா போர் ஹெலிகாப்டர் ஒன்றை அந்த நாட்டின் ஆயுதப்படை பாதுகாப்பு பிரிவினர் அதிரடியாக சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

மேலும் அது தொடர்பான வீடியோ காட்சிகளையும், உக்ரைன் ஆயுதப்படையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டு, ரஷ்யாவின் மற்றோரு போர் ஹெலிகோப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என தெரிவித்து உக்ரைனுக்கு மகிமை உண்டாகட்டும் என பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரல்ஆகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *